Published : 14 Oct 2014 11:16 AM
Last Updated : 14 Oct 2014 11:16 AM

பிலிப் வோன் சாஹர் - இவரைத் தெரியுமா?

$ ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூவின் இந்திய பிரிவுத் தலைவர். 2012 அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்த பொறுப்பில் இருக்கிறார்.

$ பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மூனிச் நகரில் இருக்கும் தலைமையகத்தில் 1987-ம் ஆண்டு கார்ப்பரேட் வாழ்க்கையை ஆரம்பித்தவர்.

$ இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு பிஎம்டபிள்யூ பெலக்ஸ்க்கு (பெல்ஜியம் மற்றும் லக்சம்பெர்க்) தலைவராக இருந்தார். அதற்கு முன்பு ஜெர்மனியில் விற்பனை பிரிவு தலைவராக இருந்தார்.

$ மூனிச் பல்கலைக்கழகத்தில் 1986-ம் ஆண்டு எம்.பி.ஏ முடித்தவர். படித்து முடித்து பி.எம்.டபிள்யூவில் இணைந்தவர் தற்போது வரைக்கும் அங்கேயே தொடர்கிறார்.

$ இப்போதைக்கு இந்தியாவில் ஒரு வருடத்துக்கு 30,000 சொகுசு கார்கள் விற்கமுடிகிறது. வருங்காலத்தில் இதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருக்கும். இந்தியாவில் சொகுசு கார்களை வாங்குவதற்கான வாடிக்கையாளர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x