

கடந்த ஆண்டில் (2016) உள்நாட்டு விமான பயணிகளின் எண் ணிக்கை 23% உயர்ந்து 9.9 கோடியாக இருக்கிறது. முந்தைய 2015-ம் ஆண்டில் 81.01 கோடி நபர்கள் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்திருக்கின்றனர். மத்திய விமான போக்குவரத்துதுறை இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மொத்த இருக்கை எண்ணிக்கை யில் 93.7% இருக்கைகள் விற்பனையாகி உள்ளன. தொடர்ந்து 21 மாதங்களாக 90 சதவீதத்துக்கு மேலான இருக்கைகள் விற்பனை யாகி உள்ளன. அதேபோல சரி யான நேரத்தில் செல்லும் விமான நிறுவனங்களின் பட்டியலில் ஸ்பைஸ்ஜெட் தொடர்ந்து மூன்று மாதமாக முதல் இடத்தில் இருக்கிறது.
பட்ஜெட் விமான நிறுவனங் களாக இண்டிகோவில் 91.4 சதவீதமும், கோஏர் நிறுவனத்தில் 90.7 சதவீத இருக்கை விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக ஏர்கோஸ்டா வின் 13.65% விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து ஏர்கார்னிவெல் (12.03%), ட்ரூஜெட் (5.01%), இண்டிகோ(2.83%), ஏர் இந்தியா (1.91%), ஜெட் ஏர்வேஸ் (1.77%), ஸ்பைஸ்ஜெட் (1.66%), ஜெட் லைட் (1.40%), கோஏர் (0.40%), விஸ்தாரா (0.40%) மற்றும் ஏர் ஏசியா இந்தியாவின் 0.11% விமான சேவைகள் ரத்து செய்யப்பட் டுள்ளன.
இண்டிகோ நிறுவனம் ஒட்டு மொத்த விமான துறையில் 41.6% சந்தையை வைத்துள்ளது. அதனை தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் (15%), ஏர் இந்தியா (13.3%), ஸ்பைஸ் ஜெட் 12.8% சந்தையை வைத்துள் ளன. விஸ்தாரா நிறுவனம் 2.9% சந்தையை வைத்துள்ளது.