Published : 21 Sep 2016 02:41 PM
Last Updated : 21 Sep 2016 02:41 PM

பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஒட்டு மொத்த பட்ஜெட் நடை முறையை மாற்றி அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் பொது பட்ஜெட் உடன் ரயில்வே பட்ஜெட் இணைய இருக்கிறது. தவிர திட்டமிட்ட செலவுகள் மற்றும் திட்டமில்லாத செலவுகள் இணைக்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் பிப்ரவரி முதல் நாளில் தாக்கல் செய்யப்படும் என்றும் ஒட்டு மொத்த பட்ஜெட் நடைமுறையும் மார்ச் 31-ம் தேதிக்குள் முடிவடைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யலாம் என்று நிதி அமைச்சகம் பரிந்துரை செய்திருக்கிறது. அடுத்த நிதி ஆண்டு முதல் இந்த மாற்றங்கள் வரும். இனி பொது பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது.

பிப்ரவரி கடைசிக்கு பதிலாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருந்தாலும் இன்னும் தேதி முடிவு செய்யப்படவில்லை. உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தேர்தல் நடக்க இருப்பதால், அந்த தேதிகளுக்கு ஏற்ப பட்ஜெட் தேதி பிறகு அறிவிக் கப்படும். பொதுபட்ஜெட் உடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட் டாலும், தற்போது செயல்படுவது போலவே ரயில்வே துறை தனித் தன்மையுடன் செயல்படும் என்றார்.

1924-ம் ஆண்டு தனியாக ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது. கடந்த 92 ஆண்டுகளாக தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட் அடுத்த வரு டத்தில் இருக்காது. நிதி ஆயோக் உறுப்பினராக பிபேக் தேப்ராய் இந்த யோசனையை பரிந்துரை செய் தார். பொதுவாக பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை நடக்கும். இனி பட்ஜெட்டின் நடைமுறைகள் மார்ச் 31-ம் தேதிக்குள் முடிவடையும்.

மத்திய கருவூலத்தில் இருந்து ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்கப் பட்டாலும், மத்திய அரசுக்கு ரயில்வே துறை டிவிடெண்ட் ஏதும் வழங்க தேவையில்லை. தற்போது சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஆகிய நடைமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை.

பட்ஜெட் நடைமுறை மட்டுமே மாறி இருக்கிறது. ரயில்வே அதி காரிகளின் நிதி சுதந்திரம் ஏற்கெனவே இருப்பது போல தொடரும். இந்த இணைப்பு மூலம் ரயில்வே மூலதன செலவுகளை உயர்த்திக்கொள்ள முடியும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

இந்த இணைப்பு காரணமாக ரயில்வே துறை பங்குகளான டிடகர் வேகன்ஸ், டெக்ஸ்மாகோ ரயில் உள்ளிட்ட சில பங்குகள் உயர்ந்து வர்த்தகமாயின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x