ஸ்மார்ட்போனில் களமிறங்கும் நோக்கியா: மீண்டும் அறிமுகமாகும் 3310

ஸ்மார்ட்போனில் களமிறங்கும் நோக்கியா: மீண்டும் அறிமுகமாகும் 3310
Updated on
1 min read

நோக்கியா நிறுவனம் தனது பிரபலமான 3310 மாடல் செல்போனை மீண்டும் அறிமுகப் படுத்தத் திட்டமிட்டுள்ளது.

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் தொடங்கிய மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் எனப்படும் சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சியில் இந்த அறிவிப்பை பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது.

நோக்கியா நிறுவனத்தை 2014-ம் ஆண்டு மைக்ரோஃசாப்ட் நிறுவனம் வாங்கிய பிறகு உற்பத்தியிலிருந்து விலகியது. இருப்பினும் நோக்கியா பிராண்டை 2016-ம் ஆண்டு ஹெஎம்டி குளோபல் நிறுவனத்துக்கு விற்பனை செய்தது. இதனால் மீண்டும் நோக்கியா போன்கள் சந்தைக்கு வருவதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்தது.

இந்நிலையில் பார்சிலோனா வில் தொடங்கிய ஸ்மார்ட்போன் கண்காட்சியில் தனது தயாரிப்பு களைக் காட்சிப்படுத்தி, தனது மறு பிரவேசத்தை நோக்கியா பிரகடனப்படுத்தியுள்ளது. ஹெஎம்டி குளோபல் நிறுவனமானது நோக்கியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள் சிலரால் உருவாக் கப்பட்டதாகும். இந்நிறுவனத்துக்கு சீனாவின் ஃபாக்ஸ்கான் நிறுவனம் பின்புலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3 என்ற ஸ்மார்ட் போன்களையும் 3310 எனும் பிரபல கீபேட் செல்போனை யும் இந்நிறுவனம் காட்சிப்படுத்தி யுள்ளது.

முன்பு அறிமுகம் செய்யப்பட்ட 3310 மாடலை விட சற்று மெல்லிய தாகவும் எடை குறைவானதாகவும் அதேசமயம் நீடித்து உழைக்கும் வகையில் இது தயாரிக்கப் பட்டுள்ளதாக நோக்கியா கூட்டு சேர்ந்துள்ள ஹெச்எம்டி குளோபல் தெரிவித்துள்ளது.

நோக்கியா 6 ஸ்மார்ட்போன் 5.5 அங்குல திரை, அலுமினியம் மேல் பகுதி, இரட்டை ஸ்பீக்கர் உள்ளிட்டபல்வேறு வசதிகளுடன் நான்கு கண்கவர் வண்ணங்களில் வெளிவந்துள்ளது. நோக்கியா 5 மாடல் 5.2 அங்குல திரையுடன் குவால்காம் ஸ்நாப் டிராகன் 430 பிராசசர் உடன் வந்துள்ளது. நோக்கியா 3 மாடல் ஸ்மார்ட்போன் 5 அங்குல திரையுடன் உலோக பிரேம், பிளாஸ்டிக் பகுதிகளைக் கொண்டது. 3310 மாடல் 22 மணி நேரம் பேசக்கூடிய பேட்டரியைக் கொண்டது. நோக்கியா மாடல் போன்கள் ஏப்ரல் பிற்பாதியில் இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in