இலவச பொருளுக்கும் ஜிஎஸ்டி முறையில் வரி

இலவச பொருளுக்கும் ஜிஎஸ்டி முறையில் வரி
Updated on
1 min read

பொருள்கள் வாங்கும் போது நிறுவனங்கள் அளிக்கும் இலவச பொருள்களுக்கும் நுகர்வோர் வரி செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலாக உள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பில் இந்த சட்டம் உள்ளது.

தங்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்தவோ, அல்லது ஆண்டு இறுதியில் தேங்கியிருக் கும் தயாரிப்புகளை தள்ளி விடவோ இத்தகைய சலுகை களை நிறுவனங்கள் வழங்கு வது வழக்கம். சரக்கு சேவை வரி விதிப்பு விதிகளை கடந்த வாரம் மத்திய அரசு வெளியிட்டு அதில் கருத்து கேட்கப்பட்டிருந் தது. உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் எந்த பொருளுக்கும் வரி விதிக்கப்படும். அது பரிசுப் பொருளாக இருந்தா லும் சரி, சாம்பிள் பொருளாக இருந்தாலும் சரி, ஒன்று வாங்கி னால் ஒன்று இலவசம் என்றிருந் தாலும் சரி அவற்றுக்கு வரி விதிக்கப்படும் என்று வரித்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜிஎஸ்டி விதி பிரிவு 3-ல் உற்பத்தி செய்யப்படும் அல்லது ஒப்புக் கொண்டதற்காக தயாரிக் கப்படும் அனைத்து பொருள் களும் வரி வரம்புக்குள் வரும் என்று குறிப்பிட்டுள்ளது.

பிரிவு 1-ன்படி பரிசீலனையின்றி விற்பனைக்கு வரும் பொருளாக இவை கருதப்படும். சரக்கு விநியோகம் அல்லது சேவை என்ற வகையில் இது கருதப்பட்டு இதற்கு வரி விதிக்கப்படும். இதன்படி இலவசமாக பெறும் பொருளுக்கு வாங்குவோர் வரி செலுத்த வேண்டும்.

பொருள் மற்றும் சேவை விநியோகத்தை முழுக்க முழுக்க அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு. இதனால் பொருள் தயாரிப்பவரோ அல்லது சேவையைப் பெறுப வரோ கட்டாயம் வரி செலுத்தியாக வேண்டும்.

இந்த வரி விதிப்பு முறை யால் விற்பனை மற்றும் சந்தைப் படுத்தல் செலவில் பாதிப்பு ஏற் படும். இலவச சாம்பிள் அளிப்ப தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கேபிஎம்ஜி இந்தியா நிறுவனத்தின் தலைவர் சச்சின் மேனன் தெரிவித்துள்ளார்.

புதிய வரி விதிப்பால் ஏற் கெனவே உள்ள உற்பத்தி வரி, வாட் உள்ளிட்டவை தவிர்த்து ஜிஎஸ்டி-யில் கூடுதலாக வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று இத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in