

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் தனது அறக்கட்ட ளைக்கு பேஸ்புக் நிறுவனத்தின் 9.5 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகளை அளித்துள்ளார்.
அவருடைய சான் ஜூகர்பெர்க் அறக்கட்டளை மற்றும் சான் ஜூகர்பெர்க் இனிஷியேட்டிவ் ஹோல்டிங்க்ஸ் ஆகிய இரண் டுக்கும் அளிப்பதற்காக 7,60,000 பேஸ்புக் பங்குகளை விற்பனை செய்துள்ளார். இந்த பங்குகளின் மதிப்பு 9.5 கோடி டாலராகும்.
மார்க் ஜுகர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரசில்லா ஆகிய இருவருக்கும் முதல் குழந்தை பிறந்தது. அவரது குழந்தை மாக்ஸிமா சானின் நினைவாக சான் ஜுகர்பெர்க் இனிஷியேட்டிவ் என்ற அறக்கட்டளை தொடங்கினர். இந்த அறக் கட்டளை கல்வி வழங்குவது, நோய்களிலிருந்து பாதுகாப்பது, மக்களை ஒன்று சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளை நோக்க மாக கொண்டது. மார்க் ஜூகர் பெர்க் தனது 99 சதவீத பேஸ்புக் பங்குகளை இந்த அறக்கட்ட ளைக்கு அளிப்பதாக கூறியிருந் தார். குழந்தைகளின் சமத்துவம், மனித வளத்தை பயன்படுத்துவது போன்ற நோக்கங்களுக்காக கடந்த டிசம்பர் மாதம் 4.5 கோடி மதிப்புள்ள பங்குகளை அறக்கட்ட ளைக்கு அளித்தார். மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு வருடமும் 100 கோடி டாலர் மதிப்புள்ள தனது பேஸ்புக் பங்குகளை அறக்கட்டளைக்கு அளிக்கப்போவதாகக் கூறியிருந் தார். அதையொட்டி இந்த 9.5 கோடி பங்குகளை தனது அறக் கட்டளைக்கு அளித்திருக்கிறார்.
தற்போது மாதந்தோறும் 171 கோடி மக்கள் பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தி வருகின்றனர்.