Published : 29 Jun 2017 09:59 AM
Last Updated : 29 Jun 2017 09:59 AM

அறிவோம் ஜிஎஸ்டி: மின்னணு ரசீதுக்கு கால அவகாசம் உள்ளதா?

ஜிஎஸ்டி முறையால் வரிதாரர்கள் எண்ணிக்கை எப்படி அதிகரிக்கும்?

தற்போது உற்பத்தி வரி வரம்பு ரூ.1.5 கோடி யாகவும் சேவை வரி வரம்பு ரூ.10 லட்சமாகவும், மதிப்புக்கூட்டப்பட்ட வரி வரம்பு தமிழ்நாட்டில் ரூ.10 லட்சமாகவும் உள்ளது. ஜிஎஸ்டி முறையில் இந்த வரிகள் உள்ளடக்கப்பட்டதாலும் வரம்பு ரூ.20 லட்சமாக உள்ளதாலும் ஏராளமானோர் ஜிஎஸ்டி நடைமுறைக்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொருள் மற்றும் சேவைக்கான உள்ளீட்டு வரி வசதியை பெறுவதற்கும் ஜிஎஸ்டி பதிவு அவசியம். இத்தகைய காரணங்களால் நிச்சயம் வரிதாரர் எண்ணிக்கை அதிகரித்து அரசுக்கு வருவாய் அதிகரிக்கும்.

இந்தியா போன்ற பெரிய நாடுகளில் அமல் செய்வதால் பாதிப்பு எப்படி இருக்கும்?

இந்தியா போன்ற நாடுகள் ஒரு வரி விதிப்புக்குக் கீழ் வருவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இதற்கு முன்பு மாறிய நாடுகள் கூட, துவக்கத்தில் பணவீக்கத்தை சந்தித்தன. அதாவது, வாங்கும் பொருட்களின் விலை அதிகரித்தது. ஒரு வரியின் கீழ் வருவதால், தொடர்ந்து கண்காணித்து, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு நிலைமை சரியாகும். ஜிஎஸ்டி மூலம் மாநிலங்களுக்கு இடையே பொருட்கள் கொண்டு செல்வது எளிதாகும். தினப்படி விற்பனை பொருட்களின் விலை குறையும்.

ஜிஎஸ்டி-யில் ரீஃபண்டு எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?

பொதுவாக ரீஃபண்டு 3 மாதத்திற்குள் திருப்பித் தரப்பட வேண்டும். அவ்வாறு 3 மாதத்திற்கு மேல் ஆகும் பட்சத்தில் ரீஃபண்டு வட்டியுடன் திருப்பித் தரப்படும்.

ஜிஎஸ்டி உலக சந்தைக்கு எப்படி தயார் செய்கிறது?

சிறு குறு அளவிலான சப்ளையர்கள் ரூ. 20 லட்சம் வரையிலான வரம்பிற்குள் அதே நிலையில் தொடருவார்கள்.

இது ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைக்கு இடையே உள்ள விலை இடைவெளியை குறைக்கும்.

வரி தடைகளை நீக்கி இலகுவான வரவு ஏற்படுத்துவதால் பொது சந்தையில் இந்திய பொருளாதாரத்தை உற்பத்திச் சங்கிலியின் வளர்ச்சிக்கும், திறனுக்கும் வழிவகுக்கும்.

வியாபாரத்தை எளிதாக்க வழிவகுப்பது - ஒற்றை ஜிஎஸ்டி-க்குள்ளே இருக்கும் பல வரிகளை ஒருங்கிணைத்தல் ஆகியவை கணிசமாக வரி இணக்கம் மற்றும் பரிவர்த்தனை செலவின செலவுகளைக் குறைக்கும்.

இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதற்கான, நிலையான, வெளிப்படையான மற்றும் முன்கூட்டிய வரி விதிப்பானது குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கும்

மின்னணு ரசீது உருவாக்கப்பட்ட பிறகு சரக்குகள் பயணிக்கப்படவில்லை எனில் என்ன செய்வது?

மின்னணு ரசீது உருவாக்கப்பட்ட பிறகு சரக்குகள் பயணிக்கப்படவில்லை என்றால் அதனை ரத்து செய்து அதற்கான காரணத்தை குறிப்பிடவேண்டும்.

மின்னணு ரசீதுக்கு ஏதேனும் கால அவகாசம் உள்ளதா?

சரக்குகள் பயணிக்கும் தூரத்தைக் கொண்டு அதற்கான கால அவகாசத்துக்கு இந்த ரசீது செல்லுபடியாகும். இது தேதி மற்றும் நேரத்தினைப் பொறுத்து கணக்கிடப்படும். உதாரணமாக ஒரு சரக்கு பயணிக்கும் தூரம் 100 கி.மீ எனில் அதற்கான கால அவகாசம் 1 நாளாகும். இதற்கான அட்டவணை ஜிஎஸ்டி வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

ரேடியோ அதிர்வெண் சாதனம் (RFID- Radio frequency identification) என்றால் என்ன?

ரேடியோ அதிர்வெண் அடையாளம் (RFID) என்பது ஒரு பொருளின் இயக்கத்தை கண்காணிக்கும் சாதனம். ஒவ்வொரு வகையைச் சேர்ந்த போக்குவரத்துக்கும் தனிப்பட்ட ரேடியோ அதிர்வு சாதனத்தைப் பெற வேண்டும். அத்தகைய ரேடியோ அதிர்வு சாதனத்தினைப் பரிமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டு பொருட்களின் இயக்கத்துக்கு முன்னர் ரேடியோ அதிர்வு சாதனமும் மின்னணு வழி ரசீதும் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் பொருட்களின் இயக்கத்தை அறிய முடியும். ஆனால் நடைமுறையில் ஒரு பெரிய அதிகாரத்தில் உள்ள ஆணையர் ஒவ்வொரு முறையும் ரேடியோ அதிர்வு சாதனத்தினைப் பெற்று அதனை உபயோகிப்பது சாத்தியமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விலையில்லா பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி

விலையுள்ள பொருட்களுக்குத் தான் ஜி.எஸ்.டி என்பதில்லை, விலையில்லாப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி கட்டாயம் செலுத்த வேண்டும். இது பிரிவு 1 -ல் அரசு தெளிவாக குறிப்பிட்டுள்ளது. நிரந்தர மாற்றம் அல்லது வியாபார சொத்துகள் எங்கு உள்ளீட்டு வரவு எடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த சொத்துக்கள் (permanent transfer or disposition of business asset), சரக்கு மற்றும் சேவைகள் விநியோகம் செய்யும் போது (related party அல்லது district person), ஏஜென்ட்டுக்கு சப்ளை செய்தால் அல்லது சப்ளை ஏஜென்ட்டால் செய்யப்பட்டால், சேவைகளை இறக்குமதி செய்யும் போது என இவற்றுக்கெல்லாம் ஜி.எஸ்.டி கட்டாயம் செலுத்த வேண்டும். உதாரணமாக ஒருவர் தனது தொழிலில் பயன்பாட்டுக்காக கணினியை வாங்குகிறார். கணினியின் மூலமாக வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து வைக்கிறார். எனவே அது அவருடைய மூலதனச் சொத்தாகவே கருதப்படும். அதற்கான உள்ளீட்டு வரியை ஏற்கெனவே அவர் எடுத்திருப்பார். இந்த சொத்தை அவர் வெளியேற்றம் அல்லது மாற்றம் செய்யும் போது ஜி.எஸ்.டி கட்டாயம் செலுத்த வேண்டும். மேலும் ஒரு பொருளைத் தானமாகக் கொடுத்தாலும் தானமாகக் கொடுக்கும் நபர் அதற்கான ஜி.எஸ்.டி.யை செலுத்த வேண்டியது அவசியம்.

இறக்குமதி செய்யப்படும் போது ஜிஎஸ்டி-ன் தாக்கம் என்ன?

தற்போது இறக்குமதியின் போது சுங்க வரி, கூடுதல் மாற்றுவரி(CVD), மற்றும் சிறப்பு கூடுதல் வரி (SAD) வசூலிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் போது வசூலிக்கப்படும் கூடுதல் மாற்று வரி (Additional duty CVD) மற்றும் சிறப்பு கூடுதல் வரிக்கு (Special additional duty SAD) மாற்றாக ஐ.ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும். இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு உள்ளீட்டு வரி வரவு எடுத்துக் கொள்ளலாம்.

மின்னணு வர்த்தகம் செய்பவர்கள் பதிவு முறை என்ன?

ஆன்லைன் மூலமாக (இணையதளங்கள், செயலிகள்) மூலமாக நடக்கும் வர்த்தகங்களையே மின் வர்த்தகம் (இ-காமர்ஸ்) என்கிறோம். இன்றைய காலகட்டத்தில் மின் வர்த்தகத்துக்கு மக்களிடையே அதிக வரவேற்பு பெற்று மிகப் பெரிய சந்தை வாய்ப்பினைத் தன்வசம் வைத்துள் ளது. இந்த மின் வர்த்தகத்தினை வலைதளத்தின் மூலமாக செயல்படுத்துபவர் ஆபரேட்டர். உதாரணமாக அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற வலைதளங்களைச் சொல்லலாம். இது மாதிரியான வலைதளங்கள் மாறிவரும் நுகர்வுச் சந்தைக்கு ஏற்ப வியாபாரம் பெருக உதவியாக இருக்கிறது. மேலும் இந்த வலைதளங்களில் வியாபாரம் செய்யும் விநியோகஸ்தர்களுக்கும் கட்டாய பதிவிற்கு உட்படுவார்கள். மின் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரி விலக்கு கிடையாது.

இந்த வலைதளத்தினை நடத்தும் ஆபரேட்டர்கள் என்பவர் தகவல் தொடர்பு சாதனம் மூலம் ஒரு சாத்தியமிக்க வாடிக்கையாளரை ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பெயரின் மூலமாக தொடர்புகொண்டு சேவை அளிப்பார். உதாரணமாக ஒலா கேப் (OLA CABS) நடத்துபவரைச் சொல்லலாம். இவர்களுக்கு என்ன விநியோக மதிப்பு இருந்தாலும் பதிவு செய்வது கட்டாயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x