Published : 06 Jan 2017 10:24 AM
Last Updated : 06 Jan 2017 10:24 AM

அனைவருக்கும் டிஜிட்டல் சேவை ஸ்மார்ட்போன் விலை குறைந்தால் மட்டுமே சாத்தியம்: சுந்தர் பிச்சை கருத்து

அடிப்படை ஸ்மார்ட்போன்களின் விலை மேலும் குறைய வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் அனைவருக்கும் டிஜிட்டல் சேவைகள் கிடைக்கும் என கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார். தான் படித்த ஐஐடி கரக்பூர் கல்வி நிறுவனத்தில் மாணவர்களுடன் உரையாற்றிய போது இவ்வாறு கூறினார். 3,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் சுந்தர் பிச்சை மேலும் கூறியதாவது:

அடிப்படை ஸ்மார்ட்போன்கள் விலையை சுமார் 30 டாலர்கள் அளவுக்கு குறைக்க வேண்டும். (2,000) மேலும் உள்ளூர் மொழி களுக்கு ஏற்ப ஸ்மார்ட்போன்கள் இருக்க வேண்டும், தொலைத் தொடர்பு வசதியும் இருக்க வேண் டும். அப்போதுதான் அனைவருக் கும் டிஜிட்டல் சேவை கிடைக்கும்.

2014-ம் ஆண்டு ஆண்ட்ராய்ட் ஒன் இயங்கு தளத்தை கூகுள் அறிமுகம் செய்தது. மைக்ரோ மேக்ஸ், கார்பன் மற்றும் ஸ்பைஸ் ஆகிய ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்கள் அந்த தளத்தை பயன்படுத்தின. அப்போது 6,399 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்கள் அறி முகம் செய்யப்பட்டன. இப்போது 1,000 ரூபாய்க்கு கூட ஸ்மார்ட் போன்கள் கிடைக்கின்றன. ஆனால் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக் கூடிய ஸ்மார்ட்போன்கள் 3,000 ரூபாய்க்கு மேல்தான் கிடைக்கின் றன.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கூகுள் நிறுவனம் பல திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறது. அரசு மற்றும் தனியார் உதவியுடன் இந்த திட்டங்கள் இருக்கும். உதாரணத்துக்கு ரயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து ரயில் நிலையங்களில் வைபை வசதி செய்து கொடுத்திருக்கிறோம்.

டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியா உலகத்தின் எந்த நாடுகளுடனும் போட்டி போடும் என்னும் நம்பிக்கை இருக்கிறது. அதற்கான அடித்தளம் இங்கு இருக்கிறது. இணைய இணைப்பு என்பது அவசியமானது. அதற்கான நடவடிக்கை மற்றும் இணையம் குறித்த விழிப்புணர்வுகளை உருவாக்குவதிலும் கூகுள் நடவடிக்கை எடுத்துவருகிறது.

ஒட்டுமொத்த மக்கள் தொகை யில் ஆங்கிலம் பேசுபவர்கள் இந்தி யாவில் குறைவு. அதனால் இந்திய மொழிகளில் கூகுள் சேவைகளை கொண்டு வரும் நடவடிக்கையில் நாங்கள் இருக்கிறோம். இதர மொழி களில் எங்களது கவனம் இருக் கிறது. எவ்வளவு இந்திய மொழி களில் முடியுமோ அவ்வளவு மொழி களில் எங்களது சேவையை கொண்டுவர திட்டமிட்டிருக்கிறோம்.

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் இருந்து மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம் உருவாகும் என்று கூறினார்.

மாணவர்களுடன் கலந்துரையாடல்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுந்தர் பிச்சை மாணவர் களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அவர் தங்கி இருந்த அறைக்குச் சென்று பார்த்தவர் ஆசிரியர்களிடமும் கலந்துரையாடி னார். நான்கு வருடங்கள் இங்கு படித்த பிறகு வெளியேறியது மிகவும் கடினமாக இருந்தது. 23 வருடங்களுக்கு பிறகு வருவது உணர்வுபூர்வமாக இருக்கிறது.

நான் சென்னையில் இருந்து வந்தவன். நான் ஹிந்தி படித்திருக் கிறேன். ஆனால் பேசியதில்லை. மற்றவர்கள் எப்படி பேசுவார்கள் என்று கவனிப்பேன். இருந்தாலும் ஹிந்தியை தவறாக பேசி இருக்கிறேன்.

ஐஐடியில் பொறியியல் படிக்கும் போது வகுப்புகளுக்கு செல்லாமல் இருந்திருக்கிறேன். பல நாட்களில் காலை வகுப்புகளுக்கு செல்லாமல் இருந்திருக்கிறேன். இந்த கல்லூரி கிடைக்காவிட்டால் என்னுடைய வாழ்க்கை அவ்வளவுதான் என என்னிடமே பல கூறியிருக்கிறார்கள்.

உங்களுக்கு எது விருப்பமோ அதனை செய்யுங்கள் வாழ்க்கை யில் ரிஸ்க் எடுங்கள். பல விஷயங் களை முயற்சி செய்யுங்கள். இந்திய பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி குறித்து ஏற்கெனவே முடி வெடுத்து விடுகிறார்கள். தொடர்ந்து அதை பற்றியே விவாதிக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் அப்படி இல்லை என்று சுந்தர் பிச்சை கூறினார்.

கூகுள் பற்றிய கேள்விகளுக்கு பதில் கூறும்போது, 2004-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நேர்காணலுக்கு சென்றேன். அப்போதுதான் ஜிமெயில் அறிமுகம் ஆனது. அதை பற்றி எனக்கு பெரியதாக எதுவும் தெரியாது என்று நேர்காணலில் பதில் அளித்ததாக கூறினார்.

1993-ம் ஆண்டு பிடெக் படிப்பை ஐஐடி கரக்பூரில் முடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x