

டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக பீம் செயலியை மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இதுவரை 1.7 கோடி நபர்கள் இதனை தரவிறக்கம் செய்திருப்பதாக நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தாலும் இப் போது அந்த பிரச்சினைகள் இல்லை என்றும் அவர் கூறினார். ஆண்ட் ராய்ட் இயங்குதளத்தில் செயல் பட்டுவந்த இந்த செயலி இம்மாத தொடக்கத்தில் ஐஓஎஸ் இயங்கு தளத்திலும் அறிமுகம் செய்யப்பட் டது. பணமதிப்பு நீக்கத்துக்கு முன்பு நாட்டில் 8 லட்சம் பிஓஎஸ் மெஷின் கள் இருந்தன. இப்போது 28 லட்சம் மெஷின்கள் உள்ளன அமிதாப் காந்த் தெரிவித்தார்.