

*சர்வதேச வங்கியான ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியின் தெற்கு ஆசிய பிராந்தியத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
*2006-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை கிரெடிட் சூயெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர். இதே நிறுவனத்தின் முதலீட்டு வங்கியின் ஆலோசகராகவும் இருந்தார்.
*1997-ம் ஆண்டிலிருந்து 2003-ம் ஆண்டு வரை டாயிஷ் வங்கியின் இந்தியப் பிரிவிற்கு தலைவராகவும், 1987-ம் ஆண்டிலிருந்து 1997-ம் ஆண்டு வரை பேங்க் ஆப் அமெரிக்காவின் கடன் வழங்கும் பிரிவின் துணைத் தலைவர் பொறுப்பிலும் இருந்தவர்.
*ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் உலோகவியல் பிரிவில் பொறியியல் பட்டமும் ஜார்க்கண்ட்டில் உள்ள செயிண்ட் சேவியர் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டமும் பெற்றவர்.