ஜிஎஸ்டி குறித்த விழிப்புணர்வு: ஒரு மண்டலத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு - சிபிஇசி தலைவர் உத்தரவு

ஜிஎஸ்டி குறித்த விழிப்புணர்வு: ஒரு மண்டலத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு - சிபிஇசி தலைவர் உத்தரவு
Updated on
2 min read

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) முறையை அமல்படுத்துவது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்த மத்திய உற்பத்தி மற்றும் சுங்க வரித்துறை வாரியம் (சிபிஇசி) முடிவு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மண்டலத் துக்கும் ரூ.1 கோடி வீதம் 23 மண்டலத்துக்கு ரூ.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சிபிஇசி தலைவர் வனஜா என் சர்னா தெரிவித்தார்.

உற்பத்தி வரி மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் தங்கள் மண்டலத் துக்குள்பட்ட பகுதிகளில் பிராந்திய அளவில் மக்களிடம் ஜிஎஸ்டி குறித்து விளக்க வேண்டும். இந்த வரி விதிப்பு முறையால் ஏற்படும் நன்மைகள், அது விதிக்கப்படும் முறை, அதை பதிவு செய்யும் முறை குறித்து விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள தலைமை ஆணையர்கள் தங்கள் தொகுப்பில் உள்ள நிதியில் ரூ.1 கோடி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரி செலுத்துவோர் அனைவரிட மும் விழிப்புணர்வு நடத்த வேண்டும். அவர்களிடம் ஜிஎஸ்டி குறித்த தகவல் சென்று சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வரி செலுத்துவோர் ஜிஎஸ்டி முறைக்கு மாறுவதற்குத் தேவை யான அனைத்து ஒத்துழைப்பையும் துறையில் உள்ள அனைத்து பணியாளர்களும், அதிகாரிகளும் வழங்க வேண்டும். அவர்கள் எவ்வித சிரமமும் இன்றி ஜிஎஸ்டிக்கு மாற வழிவகுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த சந்தர்ப் பத்தில்தான் வரி செலுத்து வோருக்கு நமது உதவி அவசியம் தேவை. அதை அவர்கள் உணரும் வகையில் இத்துறையினரின் செயல்பாடுகள் இருக்கவேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

ஜிஎஸ்டி முறைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டார். இதனால் திட்டமிட்டபடி ஜூலை 1-ம் தேதி முதல் புதிய வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தாக வேண்டும். அதற்கேற்ற நடவடிக்கைகளை அனைவரும் எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள உற்பத்தி வரி, சுங்க வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி (வாட்) உள்ளிட்ட அனைத்தும் நீங்கி ஒரு முனை வரி விதிப்பாக இருக்கும்.

இத்தகைய சூழலில் ஒரு முனை வரிவிதிப்பு குறித்த தகவல் முழுமையாக நுகர்வோர், வர்த்தகர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சிறப்பு ஏற்பாடாக 12 ஏர் இந்தியா விமானங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர டிவி மூலமாக விளம்பரமும், வானொலி மூலமாக விளம்பங்களும் செய்யப்படுகின்றன. யூ டியூப் சேனலில் ஜிஎஸ்டி இந்தியா எனும் தலைப்பில் முக்கிய பேட்டிகள், நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக நடைபெற்ற விவாதங்களும் இடம்பெறுகின்றன.

பிராந்திய அளவில் முழு வீச்சில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும்போதுதான் நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் இது சென்றடையும் என தான் உறுதியாக நம்புவதாக சர்னா தனது துறையினருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in