

பாரத் சேம்பர் ஆப் காமர்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது: இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக இருப்பதன் காரணமாகவே மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதம் வரை வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் தற்போது பண மதிப்பு நீக்கத்தால் பொருளாதாரத்தின் அடிப்படை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை குறைந்து நடப்பு நிதியாண்டில் 5 முதல் 5.5 சதவீதமாக இருக்கும்.
பண மதிப்பு நீக்கத்தால் குறுகிய கால பாதிப்பு இருந்த போதிலும் நீண்ட கால பயன்களுக்கு உரிய எந்தவொரு திட்டத்தையும் தற்போதைய அரசு வகுக்கவில்லை.
பொருளாதார ஆய்வறிக்கைக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக் கிறோம். அது சமர்பிக்கப்படும் போது நீண்ட கால பயன்களாக அரசு எதை எதிர்பார்க்கிறது என்பது தெளிவாக தெரிந்துவிடும். ஆனால் இந்த ஆய்வறிக்கைய தயார் செய்யும் போது மத்திய புள்ளியியல் அமைப்பு பணமதிப்பு நீக்கத்தை கணக்கில் எடுத்துக் கொள்கிறதா என்பது தெரியவில்லை. வழக்கமாக முதல் காலாண்டு மற்றும் இரண்டாம் காலாண்டு புள்ளிவிவரங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும்.
கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்றால் மற்ற விஷயங் களையும் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக ஏற்கத் தக்க வகையில் வரி விகிதம் இருந்தால் ஏராளமானோர் வரித் தாக்கல் செய்வார்கள். மேலும் நிலம் மாநிலப் பட்டியலில் உள்ளது. கறுப்புப் பணம் ஏராளமாக உருவாவது இந்த துறையில்தான். அதுமட்டுமல்லாமல் அரசியல் நிதிகள் தொடர்பாக சீர்த்திருத்தம் கொண்டுவருவதும் அவசியம்.
டிஜிட்டல் பேமெண்ட் முறைக்கு மாறுவதற்கு பண மதிப்பு நீக்கத்தை ஒரு கருவியாக பரிந்து ரைக்க முடியாது. மேலும் இந்த வருடம் மே மாதத்திற்கு பிறகும் பணமில்லாத தட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு அலுவாலியா தெரிவித்தார்.