

வாராக்கடன் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக வருகிற ஜுன் 12-ம் தேதி பொதுத்துறை வங்கி தலைவர்களை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சந்திக்க இருக்கிறார்.
வாராக்கடன் பிரச்சினை குறித்து விவாதிக்கவும் வாராக்கடனை வசூலிப்பதற்கு என்னென்ன நட வடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கிகளின் செயல்பாடு குறித்து மட்டுமல்லாமல் வங்கிகள் வாராக்கடனை வசூலிப்பதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 6 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. முக்கியமாக எரிசக்தி, உருக்கு துறை, உள் கட்டமைப்பு மற்றும் டெக்ஸ்டைல் ஆகிய துறைகளில் வாராக்கடன் அதிகமாக உள்ளது.
ஜாயிண்ட் லெண்டர் அமைப் பிடம் நிலுவையில் உள்ள வாராக் கடன் குறித்த வழக்குகளின் தற் போதையை நிலை என்ன? என்பது குறித்து இந்த சந்திப்பில் விவா திக்கப்பட இருப்பதாக தெரிகிறது. தவிர, வாராக்கடனை வசூலிப்ப தற்கு வங்கிகள் எடுத்துள்ள பல் வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.