

ஆக்ஸிஸ் வங்கியில் 74 சதவீத அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. தற்போது 62 சதவீதமாக இருக்கும் அந்நிய முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்த அனுமதி காரணமாக ரூ.12,973 கோடி அந்நிய முதலீடு அந்த வங்கிக்குக் கிடைக்கும். இப்போதைக்கு தனியார் வங்கியில் அந்நிய முதலீட்டுக்கு 74 சதவீத அனுமதி வழங்கப்படுகிறது.
இதில் 49 சதவீதம் அந்நிய நிறுவன முதலீட்டாளரின் பங்காகும். 1994-ம் ஆண்டு யூடிஐ, எல்ஐசி மற்றும் ஜிஐசி ஆகிய நிதி நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தொடங்கியதுதான் ஆக்ஸிஸ் வங்கியாகும்.