

சஹாரா நிறுவனத்தின் 16 சொத்து கள் ஏலம் விட முடிவு செய்யப் பட்டுள்ளன. இதற்கான முன் வைப்பு தொகை ரூ.1,900 கோடி யாக இருக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. இந்த ஏலம் ஆன்லைன் மூலம் அடுத்த மாதம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
மேலும் எஸ்பிஐ கேபிடல் மார்க்கெட் மற்றும் ஹெச்டிஎப்சி ரியாலிட்டி நிறுவனங்கள் வசம் சஹாரா நிறுவனத்தில் 61 நிலங்கள் உள்ளன. இவற்றை ஜூலை 13, மற்றும் ஜூலை 15 தேதிகளில் ஏலம் விட உள்ளன.
இதற்கிடையே ஏற்கெனவே திட்டமிடப்பட்ட 7 சொத்துகள் ஜூலை 4 மற்றும் ஜூலை 7 தேதி களில் ஆன்லைன் மூலம் ஏலம் விடப் பட உள்ளன, இதற்கான முன்வைப்பு தொகை ரூ. 1,200 கோடியாக இருக் கும். இந்த ஏலத்தின் மூலம் குறைந்த பட்சம் ரூ.3,100 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.