

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஸ்பான்ஸராக ஓப்போ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் முதல் ஐந்தாண்டுகளுக்கு இந்திய அணியின் ஸ்பான்ஸராக ஓப்போ இருக்கும். வரும் 2022-ம் ஆண்டு மார்ச் வரை ஓப்போ ஸ்பான்ஸராக இருக்கும்.
ஐசிசி போட்டிகளுக்கு 70 லட்ச ரூபாயும், மற்ற போட்டிகளுக்கு ரூ.2.2 கோடியும் அடிப்படை விலையாக நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது ஸ்டார் இந்தியா கொடுத்து வரும் கட்டணத்தை விட 15 சதவீதம் அதிகம்.
முன்னதாக சஹாரா இந்தியா பரிவார் நிறுவனம் ரூ.3.34 கோடி செலுத்திய தொகையே அதிகமாகும். ஐசிசி போட்டிகளுக்கு ரூ. 1.56 கோடியும், மற்ற போட்டிகளுக்கு ரூ.4.61 கோடியும் ஓப்போ செலுத்தும். தற்போதைய போட்டி அட்டவணை அடிப்படையில் பார்க்கும் போது, ஓப்போ நிறுவனம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ரூ.1,079 கோடி தொகையை பிசிசிஐ-க்கு செலுத்தும்.
இந்திய கிரிக்கெட் (ஆண்கள், பெண்கள், ஜூனியர்) அணியின் ஜெர்சியில் ஓப்போ லோகோ இடம்பெறும்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஐபிஎல் போட்டிகள் நடக்க இருப்ப தால் ஜூன் மாதம் இந்தியா பங் கேற்கும் போட்டிகள் தொடங்கும். அப்போதிலிருந்து புதிய ஜெர்சி யில் இந்திய அணி பங்கேற்கும்.