

எண்ணங்களை பகிர்ந்து கொள் வதற்காக சென்னை சர்வதேச மையம் (சிஐசி) என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற் கான தொடக்க நிகழ்ச்சி சென்னை யில் நேற்று நடந்தது. இந்தியாவில் இதுபோல தொடங்கப்படும் ஐந்தாவது மையம் இதுவாகும்.
1959-ம் ஆண்டு டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச மையம் தொடங்கப்பட்டது. கோவா, புணே மற்றும் பெங்களூருவை தொடர்ந்து தற்போது சென்னை யில் தொடங்கப்படுகிறது.
இது குறித்து இந்த மையத்தின் தலைவர் கோபால் னிவாசன் கூறியதாவது: சென்னையில் பல அமைப்புகள் இருந்தாலும், ஒவ் வொரு அமைப்புக்கும் ஒரு நோக் கம் இருக்கிறது. ஆனால் எந்த எல்லையும் இல்லாமல் எண்ணங் களை இங்கே விவாதிக்க முடியும். அறிவியல், அரசியல், கலை, சமூகம், தொழில் என பலதரப்பட்ட சாதனையாளர்களும் தங்களது கருத்துகளை இங்கு பகிர்ந்து கொண்டு விவாதிக்க முடியும்.
இதற்கான திட்டம் மற்றும் செயல்பாடுகளை நகரத்தில் முக்கிய பிரதிநிதிகள் அடங்கிய குழு வழிகாட்டும். இம்மாதம் 29-ம் தேதி நடைபெற உள்ள முதலாவது கூட்டத்தில் நந்தன் நிலகேணி உரையாற்ற இருக்கிறார். அடுத்த கட்டமாக டாடா குழுமத்தின் பிராண்ட் தலைவர் முகுந்த் ராஜன் உரையாற்ற இருக்கிறார். தொடக்கத்தில் மாதம் ஒரு கூட்டம் நடத்த திட்டமிட்டிருக் கிறோம். விரைவில் மாதத் துக்கு 2 கூட்டங்கள் நடத்த இருக்கிறோம்.
மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் வளாகத்தில் இந்த நிகழ்ச்சியில் நடைபெறும். அடுத்த கட்டமாக சொந்த கட்டிடத்தில் இந்த கூட்டம் நடக்கும்.