Last Updated : 13 Jan, 2017 11:20 AM

 

Published : 13 Jan 2017 11:20 AM
Last Updated : 13 Jan 2017 11:20 AM

வணிக நூலகம்: புதுமையை புகுத்தும் வளர்ச்சித் தலைவர்கள்

சில தலைவர்கள் புத்திசாலித்தனமான மிடுக்கான நபர்களை உருவாக்குகிறார்கள். வேறு சில தலைவர்கள் புத்திசாலித்தனத்தையும் மிடுக்கையும் அழித்து புதைத்து விடுகிறார்கள்.

சிலர் வளர்ச்சியை தருகிறார்கள். வேறு சிலர் தளர்ச்சியை விதைக்கிறார் கள். இந்த மாறுபாடுகள் தலைவர் களின் குணாதிசயங்களையும், நடத்தை களையும் பொறுத்தே அமைகிறது. மிகச் சிறந்த தலைவர்கள் எவ்வாறு மற்றவர்களை மிடுக்கானவர்களாகவும் புத்திசாலிகளாகவும் உருமாற்று கிறார்கள் என்பதற்கான திறவு கோல் இந்த புத்தகம்.

கிரெக் மெக்வோன் (GREG McKeown) என்ற மேலாண்மை பேராசிரியர் நீண்ட ஆய்விக்கு பின் ஆய்வு முடிவுகளை விடைகளாக வரிசைப்படுத்தி தலைமை பண்புகளுக்கு வடிவம் கொடுத்திருக் கிறார். இரண்டு வகையான தலை வர்களைப் பற்றி வகைப்படுத்தி இருக் கிறார்கள் அவை முறையே தளர்ச்சித் தலைவர்கள் மற்றும் வளர்ச்சித் தலைவர்கள்.

தளர்ச்சித் தலைவர்கள் மிக குறைவான மிடுக்கான மனிதர்களும் அறிவு குறைவானவர்களாகவும் இருப்ப தாக கருதுகிறார்கள். மேலும் தங்க ளுடைய தலைமை பண்புகளின் வழியே மட்டும் அவர்கள் செயல்களை சாதிக்க முடியும் என்றும் உறுதியாக நம்புகிறார்கள். வளர்ச்சித் தலைவர்கள் தங்களிடம் பணிபுரியும் நபர்களின் தனித்தன்மையான நுண்ணறிவையும் புதுமை காணலையும் ஊக்குவிக் கிறார்கள். தொடர்ச்சியாக ஆக்க பூர்வ மாக இருக்கும் நபர்களை நிறுவனம் எங்கும் பணி அமர்த்துகிறார்கள்.

புள்ளியியல் கூறுபடி தளர்ச்சி தலைவர்கள் 50 விழுக்காடு மட்டுமே பணியாளர்களின் திறமைகளை பயன் படுத்துகிறார்கள். வளர்ச்சி தலைவர்கள் பணியாளர்களின் திறமைகளை 70 முதல் 100 விழுக்காடு வெளி கொணர்ந்து மேம்படுத்துகிறார்கள்.

வளர்ச்சி தலைவர்களிடம் பணி புரியும் பணியாளர்கள் தங்களின் மிகச்சிறந்த பங்களிப்பை அளிப்பதோடு தங்களின் திறமைகளையும் பணிமேம் பாட்டையும் குறைத்துக் கொள்வதும் இல்லை. மறைத்துக் கொள்வதும் இல்லை. வளர்ச்சித் தலைவர்கள் தேவையானவைகளை தாராளமாக வழங்க அனுமதிக்கிறார்கள்.

தளர்ச்சித் தலைவர்களோ எந்த பணியாளரின் செயல் திறனும், நுண்ணறிவும் வளரவே முடியாது என்று எண்ணுகிறார்கள்.

ஐந்து முக்கியமான கூறுகளை வளர்ச்சித் தலைமைக்கு எடுத்துக் காட்டாகக் கூறியிருக்கிறார்கள். அவையாவன:

* மேம்படுத்தப்பட்ட செயல்பாடு

* சிறப்பான சிந்தனைக்கு அடித்தளம் அமைத்தல்

* சவால்களை நீட்டித்தல்

* முடிவுகளை விவாதித்தல்

* உரிமைகளை விதைத்தலும் பொறுப்புகளை வழங்குதலும்

மேம்படுத்தப்பட்ட செயல்பாடு

வளர்ச்சித் தலைவர்கள் செயல்பாடு களை ஊக்குவித்து அறிவுசார்ந்த முடிவுகளை அடையும் வழிமுறைகளை பின்பற்றுவார்கள். அவ்வாறு செய்யும் பொழுது செயல்பாடுகள் மேம்படும். உதாரணமாக, ஹெக்ஸல் ஏஜி (HEXAL AG) என்ற மருந்து உற்பத்தி தொழிற்சாலை ஜெர்மனியில் உள்ள மூனிச் நகரில் உள்ளது.

இங்கு நேர்காணலும் பணி குறித்த முடிவுகளும் மூன்றே நிமிடங்களில் முடிக்கப்படுக்கின்றன. நிறுவன வரைபடமோ இன்னார் இந்தப் பணியை செய்ய வேண்டும் என்ற கட்டாயமோ இல்லை. மாறாக, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் திறமைக்கேற்ப பணிகள் வழங்கப்படுகின்றன. திறமைகளைத் தேடிக் கண்டுபிடித்து உள்ளூர் மேதை களை உருவாக்கி முழு திறனோடு பாடுபடும் செயல்களை ஊக்குவித்து மேற்கூறியவைகளை செய்யாது இருப்பவர்களை புறம் தள்ளி ஒவ்வொரு தனிநபரின் செயல்பாடுகளையும் மேம்படுத்தும் பொழுது தலைமை தலை நிமிர்ந்து நிற்கிறது.

சிறப்பான சிந்தனைக்கு அடிதளம் அமைத்தல்

வளர்ச்சி தலைவர்கள் வேலை இடத்தை புத்துணர்ச்சி மிக்கதாகவும் ஊக்கமுடன் பணியாற்றும் வகை யிலும் அமைக்கிறார்கள். ஒவ்வொரு தனிநபருக்கும் வாய்ப்புகள் வழங்கப் பட்டு அவர்களின் தனித்தன்மையான செயல்பாடுகள் வளர்க்கப்பட்டு நிறுவன மேம்பாட்டிற்கு பெரிதும் பாடுபடு கிறார்கள். சுதந்திரமான பல்வேறு வகையான அனுபவ கொள்முதலை பணியாளர்கள் அனுபவிக்க வளர்ச்சித் தலைவர்கள் வழிகாட்டுகிறார்கள். தங்க ளுடைய சிந்தனைகளை ஓய்வு எடுக்கு மாறு கூறிவிட்டு மற்றவர்களின் சிந்தனைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் வித்தியாசமான சிந்தனை, வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது. மேலும் வளர்ச்சித் தலைவர்கள் பேசுவதைக் காட்டிலும் கேட்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். தங்களுடைய கருத்துகள் கேட்கப்படு கிறது என்ற உணர்வு சிறப்பான சிந்தனைக்கு அடித்தளம் ஆகிறது.

சவால்களை நீட்டித்தல்

வளர்ச்சித் தலைவர்கள் மற்றவர் களை சவால் விடுவதை போல தங்களுக்கு தாங்களே சவாலான இலக்குகளை நிர்ணயித்து கொள் கிறார்கள். வியாபார தொழில்நுட்ப அறிவு இது போன்ற நீட்டிக்கப்பட்ட செயல்பாடுகளால் வலுவான அடித் தளமாக உருவாகிறது. ஆழ்ந்த சிந்தனை களுக்கும் புதுமையான கண்டுபிடிப்பு களுக்கும் இது போன்ற சூழல் பெரிதும் உதவும். வளர்ச்சித் தலைவர்களும் இதைத் தான் வளர்க்கிறார்கள்.

முடிவுகளை விவாதித்தல்

முடிவு எடுப்பதில் சுதந்திரம் வழங்கு கிறார்கள். எடுக்கப்பட்ட முடிவுகளை விவாதிக்க அனுமதிக்கிறார்கள். வளர்ச்சித் தலைவர்கள் ஆழமான திட மான முடிவுகளை வெகு வேகத்தோடும் தாக்கத்தோடும் விவாதிக்கிறார்கள். வளர்ச்சித் தலைவர்கள் மட்டுமே இது போன்ற விவாதங்களை நடத்த வழி விடுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் விவாதிப்பவரின் தனித்தன்மையும் அவரால் ஏற்படுத்தப்பட்ட கேள்வி களும், அவரால் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த குழுவும், தரவுகளை ஒருங்கிணைத்தும் பழமைவாத எண் ணங்களுக்கு சவால் விடுத்தும் முடிவு களை மேற்கொள்ளவும் வளர்ச்சித் தலைவர்கள் வழிகாட்டுகிறார்கள்.

உரிமைகளை விதைத்தலும் பொறுப்புகளை வழங்குதலும்

வளர்ச்சித் தலைவர் உரிமைகளைக் கொடுத்து பணியாளர்களின் வெற்றிக்கு முதலீடு செய்கிறார்கள். வெற்றிக்கு வளத்தையும் வழிகளையும் வழங்குவ தோடு பொறுப்புகளையும் நிர்ணயிக் கிறார். மேலாளரை போல் அல்லாமல் முதலீட்டாளர் போல் தன்னை ஈடுபடுத் திக் கொள்கிறார். பணியாளர்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தும், பயிற்சி அளித்தும் மேம்பாடு ஆன செயல்களை திறமையாக செய் வதற்கு வழிகாட்டுகிறார். வளர்ச்சி தலை வர்களின் திறமைகளை மற்றவர்கள் படித்துக் கொள்ள முடியும். பின்பற்ற முடியும். செயல்படுத்த முடியும். இண்டியூட் (INTUIT) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பில் கேம்பெள் (BILL CAMPBELL) கல்லூரி நாட்களில் கால்பந்து குழுவிற்குத் தலைவராக இருந்தார், அவரைத் தொழில்நுட்ப நிறுவனத்தின் மேலாள ராக பணி அமர்த்தினார்கள். அவர் மற்றவர்களை மிகவும் பயமுறுத்தியும், கடினமான பயிற்சியாளரை போலவும் வதைத்து எடுத்ததாக அவரே ஒப்புக் கொள்கிறார். பின்னாளில் அவர் கூறும் பொழுது “அனைவரையும் மனநி லை பிறழும் அளவிற்கு ஆக்ரோச மாக நடந்து கொண்டேன். ஒவ்வொரு வரையும் விளிம்புவரை தள்ளி ஒவ்வொரு திசையிலும் சிதறடித்தேன். ஆனால் இரண்டு பணியாளர்கள் என் னிடம் எதிர்த்து கேள்வி கேட்ட பொழுது அவைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து கொண்டு பின்நோக்கி நினைத் துப் பார்த்தேன். அதன் மூலம் நான் பேசுவதைக் குறைத்து மற்றவர்களின் பேச்சுகளைக் கேட்க ஆரம்பித்தேன். ஆக்ரோசமாக எல்லா திசைகளிலும் சிதறவிடுவதை தவிர்த்து அன்பாக, அணுசரனையாகப் பேசினேன். என்னிடம் இருந்த எதிர்மறை விளைவுகளை உணர்ந்து அவைகளைப் புதைத்தேன்”.

இவ்வாறு பிள் கேம்பெள் தான் எவ்வாறு மாறினேன் என்பதை போல ஏராளமான தலைவர்களை ஆய்வு செய்து இந்த புத்தகம் முடிவுகளை கூறுகிறது. தலைமை பண்புகளை பற்றிய கேள்விகளுக்கும் மிகசிறந்த புத்தகத்தை படிப்பதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

தொடர்புக்கு: rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x