

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கைகளால் இந்திய ஐடி, பார்மா மற்றும் பயோடெக் துறைகளுக்கு பாதிப்பு இல்லை என மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் ஹெச்.என்.அனந்த் குமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்க அதிபரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடி இருக்கிறார். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. அதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவில் பெரிதாக பாதிப்பு இருக்காது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், பார்மா மற்றும் பயோடெக் துறைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
இதய ஸ்டென்ட் குறித்த அரசு அறிவிப்பு இன்னும் 15 நாட்களில் வெளியாகும். அதன் பிறகு ஸ்டென்ட் விலை கடுமையாக குறையும். சுகாதார துறை அமைச்சகம் கடந்த் ஆண்டு அத்தியாவசிய மருந்து பட்டியலில் ஸ்டென்டினை சேர்த்தது. இதன் காரணமாக விலை நிர்ணயம் செய்வது மத்திய அரசு கட்டுப்பாட்டில் வரும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.