

287 உள்கட்டமைப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்த தாமதமான தால் இந்த திட்டங்களுக்கான செலவு ரூ.1.66 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதனால் இந்த திட்டங்களுக்குரிய செலவினம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து புள்ளியியல் அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளது. 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் படி, 1,186 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஒதுக் கப்பட்ட தொகை ரூ.14,60,099.70 கோடி. ஆனால் தற்போது இந்த திட்டங்களை நடைமுறைப்படுத் துவதற்கு ரூ.16,26,445.47 கோடி யாகும் என்று கணக்கிடப்பட் டுள்ளது. அதாவது திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட ரூ.1,66,345.77 கோடி அதிகமாகும் என கணக்கிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத் தில், 1,061 திட்டங்களை புள்ளியி யல் அமைச்சகம் பார்வையிட்டதில் 241 திட்டங்கள் நடைமுறைப்படுத்து வதற்கு உண்டான செலவு அதிகரித் துள்ளது. 326 திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்கு காலம் அதிகரித்துள்ளது.
2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 1,186 திட்டங்களில் 287 திட்டங்களை நடைமுறைப்படுத்த உண்டான செலவு அதிகரித்துள்ளது என்றும் 336 திட்டங்களை நடைமுறைப்படுத்த காலம் அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரூ.150 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட திட்ட மதிப்பு கொண்ட 1,186 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான தகவல்களை தற்போது அறிக்கையாக புள்ளியி யல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட விரிவாக்க அமைச்சகம் இதுபோன்று காலதாமதமாகும் மற்றும் பணவிரயமாகும் திட்டங் களை ஆன்லைன் மூலமாக கண் காணித்து வருகிறது.
2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்த திட்டங்களுக்கு ரூ.6,94,056.07 கோடி செலவாகியுள் ளது. அதாவது திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்கு கணித்த தொகையில் 42.67 சதவீதம் செலவாகியுள்ளது.
மேலும் டிசம்பர் மாத நிலவரப்படி 1,186 திட்டங்களில் 336 திட்டங்கள் திட்டமிட்ட காலத்தை விட காலதாமதமாகியுள்ளது. நிலம் கையகப்படுத்துதல், வனத்துறை ஒப்புதல், நிதி ஒதுக்குவதில் தாமதம், மாவோயிஸ்ட் தலையீடு போன்ற காரணங்களால் இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கால தாமதம் ஏற்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.