உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 16% உயர்வு

உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 16% உயர்வு
Updated on
1 min read

பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 16 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 74.76 லட்சம் பயணிகள் உள்நாட்டில் பயணம் செய்தனர். ஆனால் இப்போது 16 சதவீதம் உயர்ந்து 86.55 லட்சம் பயணிகள் பயணம் செய்திருக்கின்றனர்.

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் 1.82 கோடி நபர்கள் பயணம் செய்திருக்கின்றனர். ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் 1.51 கோடி நபர்கள் பயணம் செய்தனர். சரியான நேரத்தில் பயணிக்கும் விமானமாக ஸ்பைஸ்ஜெட் இருக் கிறது. 81.1 சதவீதம் இந்த நிறு வனத்தின் விமானங்கள் சரியாக நேரத்தில் இயக்கப்பட்டிருக் கின்றன. இதனைத் தொடர்ந்து இண்டிகோ (79.7%), கோஏர் (68.8%), ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஜெட் லைட் (68.5%) மற்றும் ஏர் இந்தியா (66.2%) ஆகிய நிறுவனங்கள் உள்ளன. தொடர்ந்து ஐந்தாவது மாதமாக ஸ்பைஸ்பெட் இந்த பிரிவில் முதல் இடத்தில் இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in