

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) பங்குகளை பிரிப்பதற்கு இயக்குநர் குழுமம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதன்படி 10 ரூபாய் முகமதிப்புள்ள பங்குகள் இரண்டு ரூபாய் முகமதிப்புள்ள பங்குகளாக மாறும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் இந்த பங்குகளில் சிறுமுதலீட்டாளர்களின் பங்கும், விற்பனையாகும் பங்குகளும் அதிகரிக்கலாம்.
தவிர செப்டம்பர் 19-ம் தேதி நடந்த இயக்குநர் குழு கூட்டத்தில் கூடுதல் நிதி திரட்டுவதற்காக வாய்ப்புகள் பற்றியும் விவாதிக் கப்பட்டது.
சமீப காலங்களில் பங்குகளின் முக மதிப்பை மாற்றும் ஆறாவது வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கியாகும். சில மாதங்களுக்கு முன்பு ஆக்ஸிஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் வங்கி பங்கு பிரிப்பினை செயல்படுத்திவிட்டது.