Published : 28 Jun 2019 08:20 AM
Last Updated : 28 Jun 2019 08:20 AM

வெளிநாடு, உள்நாடு பண பரிவர்த்தனை விவரம்; 24 மணி நேரத்திற்குள் இந்தியாவில் பதிவு செய்ய வேண்டும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வெளிநாடுகளில் மேற்கொள்ளப் படும் இணைய வழி பணப் பரிவர்த் தனைக்கான விவரங்களை, இரு பத்தி நான்கு மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

கடன் அட்டை, டெபிட் கார்டு, ஆன்லைன் போன்ற வழிமுறை கள் மூலம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலை யில் இந்தப் பரிவர்த்தனை களுக்கான அனைத்து விவரங் களும் இந்தியாவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

கூடுதல் விளக்கங்களுடன்

கடந்த ஆண்டின்போதே இந்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளி யிட்டு இருந்தது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி இணைய தளத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறும் விதமாக கூடுதல் விளக்கங் களுடன் மீண்டும் இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

பணப்பரிவர்த்தனைக்கான விவரங்களை மட்டும் இந்தியாவுக்கு கொண்டு வந்தால் போதுமா அல்லது பணப்பரிவர்த்தனை செயல்முறையையும் இந்தியாவில் மேற்கொள்ள வேண்டுமா என்ற குழப்பங்கள் நீடித்து வந்தன.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட சமீபத்திய தகவல்கள் இந்தக் குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

பணப்பரிவர்த்தனைக்கான செயல்முறைகளை இந்தியாவில் மேற்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. எங்கிருந்து வேண்டுமானாலும் அதனை மேற் கொள்ளலாம்.

ஆனால் அதன் விவரங்களை பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்ட இருபத்தி நான்கு மணி நேரத்துக் குள் இந்தியாவில் பதிவு செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு

விசா கார்டு, மாஸ்டர் கார்டு, பே பால், அமேசான் பே போன்ற அமைப்புகள் மூலம் பர வலாக பணப்பரிவர்த்தனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந் நிலையில், பணப்பரிவர்த்தனை விவரங்களை இந்தியாவுக்கு கொண்டு வருவது பன்னாட்டு நிறு வனங்களுக்கு சிரமமான காரியம் என அந்நிறுவனங்கள் சார்பில் கூறப்படுகிறது.

இந்த விதிமுறையானது பணப் பரிவத்தனை அமைப்புகளுக்கு மட்டுமல்லாது இந்தியாவில் இயங் கும் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். ஆனால், இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு வங்கி களுக்கு பொருந்தாது என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x