

தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரூபா குத்வா அந்த நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார். கடந்த ஏழு வருடங்களாக கிரிசில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக அவர் பணியாற்றி வந்தார்.
நிர்வாக காரணங்களுக்காக இப்போது வெளியேறுவதே சரியானதாக இருக்கும் என்று குத்வா தெரிவித்தார். அடுத்த நிர்வாக இயக்குநரை நியமிக்கும் வரை இந்த பதவியில் தொடருவார் என்று செய்திகள் வந்த நிலையில், உடனடியாக அவர் ராஜினாமா செய்துவிட்டார். அடுத்த நிர்வாக இயக்குநரை தேடும் பணியை இயக்குநர் குழு ஆரம்பித்திருக்கிறது.