Published : 05 Sep 2018 09:13 am

Updated : 05 Sep 2018 09:13 am

 

Published : 05 Sep 2018 09:13 AM
Last Updated : 05 Sep 2018 09:13 AM

ரூ. 4.2 லட்சம் கோடி செலவில் 100 புதிய விமான நிலையங்கள் கட்ட திட்டம்: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்

4-2-100

இந்தியாவில் 100 புதிய விமானங்கள் கட்ட திட்டமிட்டி ருப்பதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச் சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். மொத்தம் 6,000 கோடி டாலர் சுமார் ரூ. 4.20 லட்சம் கோடி செலவில் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கத் திட்டமிட்டிருப்பதாக அவர் கூறினார்.

இந்தியாவில் மிகவும் வேக மாக வளரும் துறையாக விமான போக்குவரத்து திகழ்கிறது. கடந்த 50 மாதங்களாக இரட்டை இலக்க வளர்ச்சியை இத்துறை எட்டி வந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். விரைவான வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் அடுத்த 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகளுக்குள் 100 விமான நிலையங்கள் கட்டப்படும். இந்த விமான நிலையங்கள் அனைத்துமே அரசு மற்றும் தனியார் பங்களிப்பின் மூலம் நிறைவேற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார். சரக்கு போக்கு வரத்துக்கென தனிக் கொள்கை வகுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


விமான போக்குவரத்தில் ஜெர்மனி, ஜப்பான், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடு கள் முன்னணியில் உள்ளன. ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேறிவிடும் என்று சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு (ஐஏடிஏ) கணித்துள்ளது. உலக அளவில் மிக அதிக எண்ணிக்கையிலான விமான பணிகளைக் கொண்ட நாடாக, சந்தையாக இந்தியா உருமாறி வருவதையும் இந்த அமைப்பின் கணிப்பு சுட்டிக் காட்டியுள்ளது.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x