

தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் பங்குப் பிரிப்புக்கு இயக்குநர் குழு ஒப்புதல் கொடுத்திருக்கிறது. இதன் படி 10 ரூபாய் முக மதிப்பு இருக்கும் ஐசிஐசிஐ வங்கியின் ஒரு பங்கு 2 ரூபாய்க்கு மாற்றப்படும் என்று ஐசிஐசிஐ வங்கியின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
அதே சமயம் இந்த பங்கு பிரிப்பு பங்குதாரர்கள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகே அமலுகு வரும். அதன் பிறகே பங்குபிரிப்புக்கான தேதி அறிவிக்கப்படும். வர்த்தகத்தின் முடிவில் 1.41 சதவீதம் சரிந்து 1,545.75 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.