

ஆசியான் நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் (எப்டிஏ) இந்தியா விரைவில் கையெழுத்திட உள்ளது என்று வர்த்தகத்துறைச் செயலர் ராஜீவ் கெர் தெரிவித்தார்.
இதற்கான ஆவணங்கள் இந்தியாவுக்கு வந்துவிட்டதாகவும் அதில் இந்தியா விரைவில் கையெழுத்திடும் என்றும் அவர் கூறினார். கடந்த வாரம் மியான்மரில் ஆசியான் பொருளாதார அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் வர்த்தகத்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க முடியாமல் போனது. இந்திய தரப்பில் அமைச்சர் கையெழுத்திடுவதற்காக ஆவணங்கள் இந்தியா வந்துள்ளாக அவர் தெரிவித்தார். இதில் அமைச்சர் விரைவில் கையெழுத்திட உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
தாராள வர்த்தக ஒப்பந்தத்தை ஆசியான் நாடுகளின் அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டதை வெளிப்படுத்தும் வகையில் கையெழுத்திடப்படுகிறது.