Published : 27 Sep 2018 09:16 PM
Last Updated : 27 Sep 2018 09:16 PM

இந்தியாவின் மீது பாதாம் இறக்குமதியைத் திணிக்கும் அமெரிக்கா

2011-12 லிருந்து 2017-18 வரை கலிபோர்னியாவிலிருந்து நேரடியாக கப்பலில் வந்திறங்கும் பாதாம்பருப்பின் இறக்குமதி 68% அதிகரித்துள்ளது.

அதாவது 53,965 டன்களிலிருந்து 90,500 டன்களாக இறக்குமதி அதிகரித்துள்ளது. இதுகுறித்து கலிபோர்னியா பாதாம் வாரியத்தின் தலைவர் மற்றும் சி.இ.ஓ. ரிச்சர்ட் வேகாட் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, ஆண்டுவாரியாக 20% பாதாம் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இதில் இந்திய குடும்பங்கள், பண்டிகைகளான தீபாவளி, திருமண நிகழ்வுகள், மற்றும் உணவுப்பதனிடும் தொழில்கள் ஆகியவற்றைக் குறி வைக்கிறோம் என்றார்.

“ஏற்றுமதியை இன்னும் அதிகரிக்க இந்தியாவில் இன்னும் ஆராய்ச்சிகள் செய்யப்போகிறோம். 20 ஆண்டுகளாக கலிபோர்னியா பாதாம் வாரியம் இந்தியாவில் வர்த்தகம் மற்றும் நுகர்வோர் திட்டங்களை 20 ஆண்டுகளாக செய்து வருகிறது” என்கிறார் வேகாட்.

ஏபிசியின் பிராந்திய இயக்குநர் சுதர்ஷன் மஜும்தார் கூறுகையில், “ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு மட்டும் இதுவரை 26 மில்லியன் டாலர்கள் செலவிட்டுள்ளோம். இதனையடுத்து 161 ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன” என்றார்.

நீண்ட மரபு:

“எங்களைப் பொறுத்தவரை பிற நாடுகளைப் போலவே இந்தியாவும் பாதாம் நுகர்வில் பெரிய இடம் வகிக்கிறது. இப்போது நாங்கள் செய்வதெல்லாம் இந்தியர்களை இன்னும் பாதாம்பருப்பின் பெரிய நுகர்வோர்களாக மாற்றுவதுதான்” என்றார் சுதர்ஷன் மஜூம்தார்.

தாரளமயத்துக்குப் பிறகு இந்தியக் குடிமக்கள் தங்கள் ஆரோக்கியம், உணவு நிர்வாகத்தில் உணர்வுபூர்வமாக இருந்து வருகின்றனர். மேலும் வளரும் மத்திய தரவர்க்கத்தினால் பாதாம்களை வாங்கும் மக்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது. இது இந்தத் தொழிற்துறைக்கு பெரிய வளர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இந்தியாவில் 50 கோடி மக்களை பாதாம் நுகர்வோராக மாற்ற கலிபோர்னியா பாதாம் வாரியம் கவனம் செலுத்தி வருகிறது. அதாவது நாடு நகரமயமாதல் மற்றும் வளர்ச்சி ஆகியவை பாதாம் நுகர்வோரை அதிகரிக்கும் என்று அமெரிக்கக் கலிபோர்னியா பாதாம் வாரியம் திட்டமிடுகிறது.

உலகிலேயே பாதாம் அதிக அளவில் உற்பத்தி செய்யும் இடம் கலிபோர்னியாதான். உலக பாதாம் உற்பத்தியில் 81% கலிபோர்னியாவில்தான் செய்யப்படுகிறது. இதில் அவர்களின் பெருமளவு ஏற்றுமதி நாடுகளில் முதல் 5 இடங்களில் இந்தியா உள்ளது. 2017-18-ல் கலிபோர்னியா பாதாம் உற்பத்தி 10,00,171 டன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x