

தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் விளங்கும் விப்ரோ நிறுவனத்துக்கு அமெரிக்காவின் பிலிப் மோரிஸ் நிறுவன ஆர்டர் கிடைத்துள்ளது. புகையிலை சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பிலிப் மோரிஸ் நிறுவனத்துக்கான நிர்வாக சாஃப்ட்வேரை விப்ரோ நிறுவனம் உருவாக்கி செயல்படுத்தித் தரும். இந்த ஆர்டர் ஐந்து ஆண்டுகளுக்கானதாகும்.
நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப சர்வர்களை நிர்வகிப்பது, தகவல்களை சேமிப்பது, பேக் அப் மற்றும் அது சார்ந்த சேவையை அளிக்கும். அமெரிக்காவின் பிலிப் மோரிஸ் நிறுவனத் தயாரிப்புகள் 180 நாடுகளில் விற்பனையாகின்றன.