

கம்ப்யூட்டர் சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இன்டெல் நிறுவனம் இருவகை பயன் பாடுகளை ஒருங்கே கொண்ட டேப்லெட் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டேப்லெட் கம்ப்யூட்டர்கள் இணையதள விற்பனை நிறுவனமான ஸ்னாப்டீல் மூலம் விற்பனை செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த டேப்லெட் கம்ப்யூட்டரை லேப்-டாப்பாக பயன்படுத்தும் வகையில் கீ பேட் உள்ளது. இதன் விலை ரூ. 19,990 ஆகும். இதில் 10.1 அங்குல திரை உள்ளது. தொடர்ந்து 7 மணி நேரம் வீடியோ பார்க்கும் வசதி, 10 மணி நேரம் தொடர்ந்து இண்டர்நெட் சர்ஃப் செய்வதற்கு வசதியாக இதில் 7,900 எம்ஏஹெச் லிதியம் பாலிமர் பேட்டரி உள்ளது.இதில் இன்டெல் ஆட்டம் பிராசஸர் இஸெட் 3735டி உள்ளது.