Published : 16 Sep 2018 11:10 AM
Last Updated : 16 Sep 2018 11:10 AM

சாப்ட் பேங்க் எனர்ஜி நிறுவனம் மீது மின்துறை இணை அமைச்சர் குற்றச்சாட்டு: பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம்

சோலார் மின்னுற்பத்தி ஏலத் தில் ஏகபோகமாக செயல்பட்டதாக சாப்ட் பேங்க் எனர்ஜி நிறுவனத் தின் மீது மத்திய மின்துறை இணை யமைச்சர் ஆர்.கே. சிங் புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக் துணைத் தலைவர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதி யுள்ளார்.

இது தொடர்பாக, மத்திய மின் துறை இணையமைச்சர் ஆர்.கே சிங் கூறியதாவது: ‘‘கடந்த ஜூலை மாதத்தில் நடந்த சோலார் மின்னுற்பத்தி ஏலத் தில் சாப்ட் பேங்க் எனர்ஜி (எஸ்பி என்ர்ஜி) பங்கு பெற்றதுடன் 3,000 மெகாவாட் சோலார் மின்சாரத் துக்கான ஏல தொகையை உயர்த் தியது. இது தொடர்பாக ஆய்வு செய்து எஸ்பி எனர்ஜி நிறுவனத் தின் ஏல கேட்பு தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது’’ என்றார்.

சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்துக்காக 3,000 மெகாவாட் மின்னுற்பத்தி மேம்பாட்டுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் திட்டமிடப் பட்டது. ஆனால் இதற்கான ஏல முன்வரைவுகள் பெரும்பாலா னவை தள்ளுபடி செய்யப்பட்டன.

குறிப்பாக முதலில் வந்த ஏல கேட்புகளில் பகுதியளவிலான ஏல கேட்புகள் நிராகரிக்கப்பட்டன. 3,000 மெகாவாட் திட்டத்தில் 2,400 மெகாவாட்டுக்கான ஏலம் நிராகரிக்கப்பட்டது. 600 மெகா வாட்டுக்கான ஏலம் மட்டும் அளிக்கப் பட்டது. இது மிகக் குறைந்த கட்டணத்தில் யூனிட் 1க்கு 2.44 விலையில் அளிக்கப்பட்டது.

ரூ.2.71 க்கு கேட்ட எஸ்பி எனர்ஜி மற்றும் ரிநியூ பவர் ஏலங்கள் தள்ளு படி செய்யப்பட்டன. மஹிந்திரா சோலார் மற்றும் அதானி நிறு வனத்தின் மஹாபா சோலார் நிறுவனங்கள் 300 மெகாவாட் உற்பத்திக்கு ரூ.2.64 விலையில் ஏலம் கேட்டிருந்தன.

இந்த ஏலத்தை நிராகரிப்பதற் கான காரணம் அளிக்கப்படவில்லை என்றாலும், குறைந்த விலையை குறிப்பிட்டதன் அடிப்படையில் ஏலம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எங்களால் நிராகரிக்கப் பட்ட எஸ்பி எனர்ஜி நிறுவனம் இந்த ஏல கேட்பு தொகையை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. குறைந்தபட்ச ஏல கேட்பு தொகைக்கும், இந்த நிறு வனத்தின் ஏல தொகைக்கும் 27 பைசா வித்தியாசம் இருந்தது. ஆனால் இதர நிறுவனங்களில் ஏல தொகை வித்தியாசம் 10 பைசாவுக்கு மேல் உயராமல் இருப்பதற்கு எஸ்பி எனர்ஜி முயற்சிகளை எடுத்துள்ளது.

பின்னர் ஜூலை 13-ம் தேதி நடைபெற்ற ஏலத்தில் முதலில் ஏலம் போன தொகை ரூ.2.44 ஐ விட மூன்று நிறுவனங்களும் ரூ.2.71 தொகையை குறிப்பிட்டுள்ளன. இதனால் இந்த ஏலமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x