Published : 27 Sep 2018 09:44 AM
Last Updated : 27 Sep 2018 09:44 AM

ரூ. 7 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளை ஈர்க்க புதிய தொலைத்தொடர்பு கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்

தொலைத்தொடர்பு துறையில் முத லீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய தொலைத்தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. தேசிய இணைய தொடர்பு கொள்கை 2018 என்ற இந்த கொள்கை மூலம் ரூ. 7 லட்சம் கோடி வரையிலான முத லீடுகளை ஈர்க்கலாம் என்றும் இதன் மூலம் 2022க்குள் 40 லட் சம் வேலைவாய்ப்புகளை உருவாக் கலாம் என்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

அதிவேகமாக வளர்ந்துவரும் இணைய யுகத்தில் புதிதாக 5ஜி மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி) தொழில்நுட்பங்கள் விரை வில் சந்தையில் அறிமுகப்படுத்தப் படவுள்ள நிலையில் அதற்கேற்ற கொள்கை அவசியமாக உள்ளது என்று தொலைத்தொடர்பு துறை கரு தியது. இதற்காக கடந்த மே மாதம் வரைவு ஒன்றை தயார் செய்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டது.

அதன்படி 2022க்குள் அரசு அனைவருக்கும் பிராட்பேண்ட் சேவை வழங்க வேண்டும் என்றும், 40 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் இந்திய ஜிடிபியில் 6 சதவீதமாக உள்ள இணைய தொலைதொடர்பு துறையின் பங்களிப்பை 8 சத வீதமாக உயர்த்த வேண்டும் என் றும் திட்டமிட்டது.இந்த இலக்கை அடையவே தற்போது இந்த கொள்கை நிறைவேற்றப்பட்டுள் ளது. இதன் மூலம் டெலிகாம் நிறுவனங்களிடமிருந்து ரூ. 7 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளை ஈர்க்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும், இந்த கொள்கைவின் கீழ் இணைய சேவை இல்லாத பகுதிகளில் இணைய சேவையைக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x