Last Updated : 11 Sep, 2018 08:52 AM

 

Published : 11 Sep 2018 08:52 AM
Last Updated : 11 Sep 2018 08:52 AM

இந்தியாவில் வேலை வாய்ப்பு இல்லாத வளர்ச்சியா?- நிதி அமைச்சக ஆலோசகர் சஞ்ஜீவ் சன்யால் மறுப்பு

வேலை வாய்ப்பு உருவாக்கப் படவில்லை, இப்போது எட்டப்பட் டுள்ளது வேலை வாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி என்று கூறப் படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற் றவை என்று நிதி அமைச்சகத்தின் ஆலோசகர் சஞ்ஜீவ் சன்யால் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிபுணரான சஞ் ஜீவ் சன்யால் 2017-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகத்துக்கு ஆலோச கராக மூன்று ஆண்டு காலத்துக்கு நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன்பு டாயிஷ் வங்கியின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

முறைசார தொழில்துறையில் எந்த அளவுக்கு வேலை வாய்ப்பு கள் பெருகியுள்ளன என்பதற்கு தெளிவான புள்ளி விவரங்கள் இல்லை. அதேபோல வேலைக்காக புலம் பெயர்ந்தோர் குறித்த விவரமும் இல்லை.

இந்தியா போன்ற அதிக மக் கள் தொகை மற்றும் பரப்பளவு மிகுந்த நாட்டில் வேலை உருவாக் கம் என்பது மிகப் பெரும் பிரச்சினை யாகும். இருந்தாலும் இப்போது எட்டப்பட்டுள்ள வளர்ச்சியானது வேலை வாய்ப்பை உருவாக்காத வளர்ச்சி என்று கூறப்படுவதை ஏற்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாகவே வேலை உருவாக்கம் குறித்த விவரங்களை துல்லியமாக பெற அரசு சில நடைமுறைகளை செயல் படுத்தி வருகிறது. இருந்தாலும் முறைசாரா தொழில்துறையில் போதிய விவரங்கள் கிடைப்ப தில்லை அதேபோல குறிப்பிட்ட காலத்தில் மட்டும் (சீசனல்) வேலை அளிக்கும் துறைகள் குறித்த விவ ரமும் கிடையாது என்று அவர் கூறினார்.

சமீபத்திய இபிஎப்ஓ தகவலின் படி 47லட்சம் பேர் புதிதாக வேலை வாய்ப்பை 2017 முதல் 2018 ஜூன் வரையான காலத்தில் பெற்றுள் ளதாக தெரிவித்துள்ளது. இஎஸ்ஐ தகவல் தொகுப்போ 23 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அமேசான் நிறுவனத்தின் டெலி வரி பணிக்கு மட்டுமே மிக அதிக எண்ணிக்கையிலானோர் தேவைப்படுகின்றனர். இது மிகப் பெரும் வேலை வாய்ப்பு வழங்கும் துறையாக விரிவடைந்துள்ளது. இதேபோல முழு நேர பணியும் உள்ளன. இவை அனைத்தும் பக்கோடா வியாபாரி வேலை அல்ல என்றும் அவர் கூறினார்.

வேலை வாய்ப்பை உருவாக் காத வளர்ச்சி எனில் அதில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகும். ஆனால் வரி செலுத்தும் அளவு அதிகரித் துள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அதிகரித்துள்ளது. அப்படியெனில் அதை எத்தகைய வளர்ச்சியாக கருத்தில்கொள்வது என்றார்.

2017-18-ம் நிதி ஆண்டில் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் வளர்ச்சி யானது 8.2 சதவீதமாக இருந்தது. இது முழுமையான வளர்ச்சியாகும். பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிந்தைய காலாண்டு வளர்ச்சியாகும். இந்த நடவடிக்கையால் பல சிறு, குறுந் தொழில்கள் நலிவடைந்ததாகக் கூறப்பட்டாலும் வளர்ச்சி எட்டப் பட்டுள்ளது. பெரிய நிறுவனங்கள் தொடக்கத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் ஜிஎஸ்டி அம லின் மூலம் சீரான வளர்ச்சியை எட்டிவருகின்றன என்று குறிப் பிட்டார்.

இந்தியா போன்ற பரந்துபட்ட நிலப்பரப்பில், வளர்ச்சி சுழற்சி யானது, இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை அளித்து முன் னேறுவதாகும். இதில் விரைவான வளர்ச்சியை எட்ட தொழில் நுட்பத்தை அவர்களுக்கு கற்றுத் தருவது அவசியமாகும். திறன் மேம்பாடு, தொழில்நுட்பம் மூலம் திறனை மேலும் வளர்ப்பது உள்ளிட்டவைதான் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். என்று குறிப்பிட் டார் சன்யால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x