Last Updated : 01 Jun, 2019 05:27 PM

 

Published : 01 Jun 2019 05:27 PM
Last Updated : 01 Jun 2019 05:27 PM

இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வசூல்: ரூபாய் 1 லட்சம் கோடியைத் தொட்டது

இந்தியா முழுவதும் சரக்கு சேவை வரி சென்ற ஆண்டை ஒப்பிடும்போது ஆறாயிரம் கோடி அதிகரித்து, முடிவடைந்த மே மாதத்தில் 1 லட்சம் கோடியைத் தொட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ள விவரம்:

சரக்கு சேவை வரி சென்ற ஆண்டு ரூ.94,016 கோடி வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டின் சரக்கு சேவை வரி வசூல் சென்ற விட அதிகமாக 1 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.

மே மாதம் வசூலான நிகரத் தொகை ரூ.1,00,289 கோடியாக உயர்ந்துள்ளது. எனினும் சென்ற மாதம் வசூலான தொகை ரூ.1,13,865 கோடியை ஒப்பிடும்போது இது சற்று குறைவுதான்.

2019, மே மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய், ரூ 1,00,289 கோடி, இதில் மத்திய சரக்கு சேவை வரி (சிஜிஎஸ்டி)  ரூ 17,811 கோடி, மாநில சரக்கு சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி) ரூ.24,462 கோடி ஆகும். ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஐஜிஎஸ்டி) ரூ.49,891. கூடுதல் கட்டணமாக விதிக்கப்படும்  செஸ் வரியின் வசூல் தொகை ரூ.8,125 கோடி ஆகும்.

இது தவிர, மாநிலங்களுக்கு பிப்ரவரி-மார்ச், 2019 மாதங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு அளிக்க 18,934 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்படும் வகையில் கடந்த 2017 மார்ச் 27 அன்று, நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்டம் 2017 (122வது திருத்தச் சட்டம்) தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக இந்தியா முழுவதும் ஒற்றை வரியாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஒரு மறைமுக வரி வசூலிக்கப்படுவது நடைமுறைக்கு வந்தது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x