

டார்ஜீலிங் பகுதியில் உள்ள மகைபாரி தேயிலை ஒரு கிலோ ரூ. 1.12 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது. டார்ஜீலிங் மகைபாரி தேயிலைக்கு உலகம் முழுவதும் மிகுந்த கிராக்கி உள்ளது. இந்த ஆண்டு இது மிக அதிகபட்ச விலையை எட்டியுள்ளது. ஒரு கிலோ தேயிலை 1,850 டாலர் விலைக்கு ஜப்பான் முன் பதிவு செய்துள்ளதாக தேயிலை வாரியத் தலைவர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
தேயிலை தொழிலில் மதிப்பு கூட்டல், தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் மகைபாரி தேயிலை மிகவும் பிரபலமானதாகும். இருப்பினும் இந்திய தேயிலை விற்பனை வரலாற்றில் இந்த அளவுக்கு அதிக விலைக்கு தேயிலை விற்பனையாவது இதுவே முதல் முறை என்று டார்ஜீலிங் தேயிலை சங்க செயலர் கௌஷிக் பாசு தெரிவித்தார்.