Last Updated : 09 Jun, 2019 04:26 PM

 

Published : 09 Jun 2019 04:26 PM
Last Updated : 09 Jun 2019 04:26 PM

சிறிய வங்கிகள் பெரிய வங்கிகளோடு இணைக்கப்படும் - 2019-20 பட்ஜெட்டில் அதிரடி வங்கிச் சீர்திருத்தங்கள்

மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறை பொறுப்பேற்ற பிறகு ஜூலை 5ல் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் 2019-20 பட்ஜெட்டில் தொலைநோக்குப் பார்வையிலான வங்கிச் சீர்திருத்தங்கள் பற்றிய அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

இந்தியாவின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டவேண்டுமெனில், அதற்கான முக்கிய பங்கு வகிக்கக்கூடிய நிலையில் வங்கிகளே  உள்ளதால் அதில் நிறைய சீர்திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.

அதற்கான அறிவிப்புகள் வரும்  ஜூலை 5 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள 2019-20க்கான பட்ஜெட்டில், மாநில அரசுக்கு சொந்தமான வங்கிகள் உள்ளிட்ட அனைத்து தேசிய வங்கிகளும் மறுசீரமைக்கப்பட உள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் சிறிய வங்கிகள் பெரிய வங்கிகளோடு இணையும் வாய்ப்புகள் உள்ளன.

தொய்வுநிலையில் உள்ள பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக வங்கித்துறையில் செய்யப்பட வேண்டிய அதிரடி மாற்றங்கள் குறித்த அறிவிப்புகளை பட்ஜெட் தாக்கல் அறிக்கையின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட உள்ளார்.

வரும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் பொதுத்துறை வங்கியியல் துறையில், வங்கிகள் ஒருங்கிணைப்புப் பயணத்திற்கான புதிய திசையையும் வழங்கும்.முதல் மூன்று வழி இணைப்புகள் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவை பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன. இதன்மூலம் ஏப்ரல் 1 முதல் இவ்வங்கி நாட்டின் மிகப்பெரிய மூன்றாவது வங்கியாக உருவெடுத்தது.

சிறிய கடன் வழங்குபவர்களிடமிருந்து கடன்பெறும் பயனாளிகளுக்கு சில மூலதன ஆதரவுடன், பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை ஆதரவளிக்கும்.

அரசாங்கம் ரூ. 5,042 கோடி முதலீடு வைத்து பாங்க் ஆப் பரோடாவை தொடங்கியது. கூடுதல் செலவை ஈடுகட்டவேண்டுமெனில் வங்கியின் மூலதன அடித்தளத்தை அதிகரிக்க வேண்டும். இதற்காகத்தான் பாங்க் ஆப் பரோடாவுடன் இன்னும் இரண்டு வங்கிகள் தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகிய வங்கிகள் இணைக்கப்பட்டன.

இம்முறையை நரசிம்மம் கமிட்டி அறிக்கை 1991 இல் பரிந்துரைத்தது. இந்த இணைப்பு மூலம், அரசாங்கம் உலகளாவிய ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இதனால் அனைத்து பங்குதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மை கிடைக்கும்.

ரூ.8.75 லட்சம் கோடியில் முன்னரே செலுத்தும் அட்வான்ஸ் தொகை மற்றும் ரூ.6.75 லட்சம் கோடி வைப்புத் தொகைகளுடன் மொத்தத்தொகை ரூபாய் 15 லட்சம் கோடிக்கும் மேலான பேலன்ஸ் ஷீட்டுடன் ஒருங்கிணைந்த நிறுவனம் வங்கித்துறையில் தொழில்ரீதியான வர்த்தக கலவை செயல்பாட்டை தொடங்கியது.

பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்த நிலையில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கிநிறுவனம் பாங்க் ஆப் பரோடா ஆகும். தற்போது 9,500 கிளைகளும் 13,400 ஏடிஎம்களும், 85 ஆயிரம் ஊழியர்களையும் கொண்டுள்ளது. இவ்வங்கி 12 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகிறது.

பாங்க் ஆப் பரோடா இணைப்புக்கு முன்னதாகவே வங்கி இணைப்புகளில் இந்திய அரசாங்கத்திற்கு முன் அனுபவம் உண்டு. ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் அதனுடன் பாரதிய மகிளா வங்கியும் ஏப்ரல் 2017லிருந்து இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x