

ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.21 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக தொழிற்சாலை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ராஜஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
அதுல் சோப்ரா என்பவர் ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் மாவட்டத்தில் உள்ள பிவாடி நகரின் 'ரிக்கோ' தொழிற்பேட்டையில் சொந்தமாக ஜவுளித் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.
இவர் விலைப்பட்டியல் ரசீது ஏதுமின்றி கோடிக்கணக்கான தொகையில் சரக்குகளை வழங்கியுள்ளார். இதன்மூலம் இவர் மிகப்பெரிய அளவில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றச்சாட்டப்பட்ட தொழிலதிபர் சோப்ரா கைதுசெய்யப்பட்டு ஜெய்ப்பூர் சிவில் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியின்முன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இவர் நாளை வரை நீதிமன்றக் காவலில் வைக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஜிஎஸ்டி வரிஏய்ப்பில் ஈடுபட்ட இந்த தொழிலதிபருக்கு தற்போது ராஜஸ்தான் மாநில அரசு மட்டும் மாநில ஜிஎஸ்டி கட்டவில்லையென கைதுசெய்து தண்டனை பெற்றுத்தர களத்தில் இறங்கியுள்ளது.