

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்குகளை ஒரு ரூபாய் முக மதிப்புள்ள பங்குகளாக மாற்ற முடிவெடுத்திருக்கிறது. இதற்கான ஒப்புதலை இயக்குநர் குழுமம் புதன் கிழமை வழங்கியது.
அதேபோல ஜிடிஆர்-ன் (obal depository receipts) முகமதிப்பிலும் சிறிய மாற்றம் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது. இந்த மாதத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய வங்கிகள் பங்கு பிரிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டன. புதன் கிழமை வர்த்தகத்தின் முடிவில் எஸ்.பி.ஐ. பங்கு 2.7 சதவீதம் சரிந்து 2,486 ரூபாயில் முடிவடைந்தன.