Published : 26 Jun 2019 09:14 AM
Last Updated : 26 Jun 2019 09:14 AM

ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் மூலம் இந்தியா 8 முதல் 10 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும்; நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா கருத்து

ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சியை எட்டும்போதுதான் இந்தியா 8%முதல் 10 % வளர்ச் சியை எட்ட முடியும். அப்போது தான் அதிக ஊதியத்திலான மிகச் சிறந்த வேலை வாய்ப்புகளை உரு வாக்க முடியும் என்று நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்தார்.

ஏற்றுமதி சார்ந்த வர்த்தகம் வளர்ச்சியடைய வேண்டுமெனில் இந்தியா இன்னும் திறந்த நிலை பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

இறக்குமதியை கட்டுப்படுத்த அதிக சுங்க வரி விதிப்பது எனும் முடிவு பின்னோக்கி செல்வதைப் போன்றது. மாறாக ஏற்றுமதியை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 2000-வது ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்று மதியை அதிகரித்தபோதுதான் இந் தியா மிகச் சிறப்பான வளர்ச்சியை எட்டியது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். எனவே ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சியை நாம் மீண்டும் கடைப்பிடிக்க வேண் டும் என்று ஐக்கிய நாடுகள் சபை யில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில் அவர் தெரிவித்தார்.

நரேந்திர மோடி அரசின் பொரு ளாதார முன்னுரிமை குறித்து பேசிய அவர், 2003-04-ம் ஆண்டிலிருந்து கடந்த 15 ஆண்டுகளாக இந்தியா 7 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த ஐந்தாண்டுக்கால மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதத்தை தொட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். சிறந்த வேலை வாய்ப்புகளை இந்தியாவில் உரு வாக்க வேண்டுமாயின் 8 சதவீதம் முதல் 10 சதவீத வளர்ச்சி மிகவும் அவசியம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

20 முதல் 30 ஆண்டுகளாக 8 சத வீதம் முதல் 10 சதவீத வளர்ச்சியை எட்டாத எந்த ஒரு நாடும் வளர்ச் சியடைந்ததாக சரித்திரம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

ஏற்றுமதி அதிகரிக்கும் அதே சமயம் இறக்குமதியும் அதிகரிக் கும். இரண்டும் அதிகரிப்பதில் தவறில்லை. இறக்குமதியைக் கட்டுப்படுத்த நினைக்கும்போது தான் வளர்ச்சி தடைப்படும் என்றார்.

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு பிரச்சினை அல்ல, குறைந்த ஊதியம்தான் மிகப் பெரும் பிரச்சினை என்றும் சுட்டிக் காட்டினார். இந்தியாவில் சுய வேலைவாய்ப்பு மிகவும் அதிகம். 44 சதவீதம் பேருக்கு விவசாயம் வேலை வாய்ப்பை அளிக்கிறது. 75 சதவீதம் பேருக்கு வேலையளிக் கும் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் அதிகபட்சம் 5 அல்லது அதற்கும் குறைவான ஊழியர்களைக் கொண் டவையாக உள்ளன. இவற்றின் உற்பத்தியும் குறிப்பிடத்தக்க வகையில் இல்லை என்றார்.

இந்தியாவில் இப்போதைக்கு தேவை நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள்தான். இவை அனைத்தும் ஏற்றுமதி சார்ந்தவை யாக இருக்க வேண்டும். இவற்றில் உற்பத்தியாகும் பொருள்கள் சர்வதேச அளவில் மிகச் சிறந்தவை யாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் வாராக் கடன் அளவை முற்றிலுமாக குறைக்க வேண்டும். இதற்கு வங்கிகளை தனியார்மயமாக்குவது ஒன்றுதான் சிறந்ததாக இருக்கும். இது அரசின் திட்டங்களில் ஒன்றாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சீனாவின் ஷென்சென் மாகாணத் தில் உள்ள சுதந்திரமான தொழில் மண்டலங்களைப் போல இந்தியா வில் உருவாகும்போதுதான், தொழில் முனைவோர் அதிக அள வில் உருவாவர். இதற்குரிய சூழலை உருவாக்க வேண்டியதும் அவசியம் என்றார். 1980-ம் ஆண்டு ஷென்சென் தொழில் பூங்கா இன்று 500 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு பரந்து விரிந்துள்ளது. இங்கு தொழில் நடவடிக்கையும், பொருளாதார வளர்ச்சியும் அபரிமிதமாக உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x