

வங்கி விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் கூறி இருக்கிறது. கிங்பிஷர் வழக்கு அடிப்படையில் நிதி அமைச்சகம் இவ்வாறு தெரிவித்திருக்கிறது. கடன் வாங்கிய ஒரு நிறுவனம் பல வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்திருப்பதைத் தடுக்க வேண்டும் என்று நிதி அமைச்சகம் கூறியிருக்கிறது.
விவரம் தெரிந்த வட்டாரத் தகவல்கள்படி கிங்பிஷர் நிறுவனம் ஹெச்.டி.எப்.சி. வங்கியில் நடப்பு கணக்கு வைத்திருக்கிறது. இந்த வங்கிக்கணக்கில் 7.5 கோடி ரூபாய் பணம் இருக்கிறது. எஸ்.பி.ஐ. வங்கி தலைமை யிலான வங்கிகள் கிங்பிஷர் நிறுவனத்துக்கு கடன் கொடுத்திருக்கின்றன.
மொத்தம் ரூ. 6,521 கோடி கடனை கிங்பிஷர் செலுத்த வேண்டும். ஆனால் அதை செலுத்தாமல் ஹெச்.டி.எப்.சி. வங்கி நடப்புக் கணக்கில் 7.5 கோடி ரூபாயை கிங்பிஷர் வைத்திருக்கிறது.