

நாட்டின் முன்னணி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் ஜூலை 1-ம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. மாதத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை 3 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் செலுததலாம் எனவும், 5 முறைக்கு மேல் பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கனரா வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து கனரா வங்கியின் தலைமை அலுவலகம் வங்கி கிளைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கனரா வங்கி சேமிப்பு கணக்கில் தற்போது 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் டெபாசிட் செய்ய கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. கணக்கு வைத்துள்ள கிளை மற்றும் பிற கிளைகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகைக்கு ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ரூ. 1 வீதம் வசூலிக்கப்படும். குறைந்தபட்சம் ரூ. 50 முதல் ரூ. 2,500 வரை வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டணத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மாதத்தில் முதல் மூன்று முறை மட்டுமே 50 ஆயிரம் வரை பணம் கட்டணமின்றி டெபாசிட் செய்ய முடியும். டெபாசிட் செய்யப்படும் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ரூ. 1 வீதம் வசூலிக்கப்படும். இது குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் பிடித்தம் செய்யப்படும். இதற்கு கூடுதலாக ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும்.
50 ஆயிரத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்யும்போது டெபாசிட் செய்யப்படும் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ரூ. 1 வீதம் வசூலிக்கப்படும். இது குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் பிடித்தம் செய்யப்படும். இதற்கு கூடுதலாக ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும்.
பணம் எடுக்க கட்டணம்
வங்கிக் கிளை சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுக்க தற்போது கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. வரும் ஜூலை 1-ம் தேதி முதல் இதில் மாற்றங்கள் செய்யப்படுகிறது.
அதன்படி, சேமிப்பு கணக்குகளுக்கு மாதத்துக்கு 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். ஐந்து முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு ரூ 100 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் கூடுதலாக வசூலிக்கப்படும்.
நடப்பு கணக்குகளை பொறுத்தவரையில், வங்கிக் கிளையில் 5 லட்சம் வரை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். ரூ. 5 லட்சத்துக்கு மேல் பணம் எடுப்பவர்கள் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ரூ. 1 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் குறைந்தபட்சம் ரூ. 100 முதல் அதிகபட்சமாக ரூ. 10,000 மற்றும் ஜிஎஸ்டி வரியும் பிடித்தம் செய்யப்படும் என கனரா வங்கி தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி வங்கி கசோலை தொடங்கி மற்ற பிற பணிகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. வங்கி கணிக்கை முடித்துக் கொள்ளவும் இனிமேல் கட்டணம் வசூலிக்கப்படும் என கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.