

மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பிலிப்ஸ் நிறுவனம் இப்போது காற்று சுத்திகரிப்பான் (ஏர் பியூரிஃபையர்) தயாரிப்பில் இறங்கியுள்ளது.
அறைகளில் சுத்தமான காற்றை அளிக்கக் கூடிய இந்நிறுவன ஏர் பியூரிஃபையர்கள் ரூ. 16,995 முதல் ரூ. 39,995 விலையில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்தியாவில் காற்று மாசு அதிகரித்து வருவதால், இத்தகைய காற்று சுத்திகரிப் பானின் தேவை அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு பிரத்யேகமாக காற்று சுத்திகரிப்பானைத் தயாரித் துள்ளதாக நிறுவனத்தின் இந்தியப் பிரிவு துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஏ. கிருஷ்ண குமார் தெரிவித்தார். இது தவிர, அல்ட்ரா சவுண்ட் போர்டபிள் இசிஜி கருவி மற்றும் சோலார் கிரிட் ஆகியவற்றை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.