

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஏ.சி. உற்பத்தி நிறுவனமான டெய்கின், நடப்பு நிதி ஆண்டில் 20 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்ப்பதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.ஜே.ஜாவா தெரிவித்தார்.
கடந்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் விற்பனை 2,200 கோடி ரூபாயாக இருந்தது. விற்பனை அதிகரிப்பதற்காக விற்பனை மையங்களை அதிகரிக்கப்போவதாகவும், இதற்காக இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களை நோக்கி செல்வதற்கும் நிறுவனம் திட்டம் வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். தற்போது 1,800 என்ற எண்ணிக்கையில் இருக்கும் டீலர்களின் எண்ணிக்கையை 2,500 ஆக உயர்த்தவும், நேரடி கிளைகளை 11லிருந்து 17 ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட் டிருப்பதாகவும் கூறினார்.
புதிய வித்தியாசமான தயாரிப்புகளை உற்பத்தி செய்வதன் மூலம் வளர்ச்சி அடைய விரும்புகிறோம் என்று தெரிவித்த அவர், இன்வர்டர் ஏ.சி.யில்தான் வருங்காலத்தில் வளர்ச்சி இருக்கும் என்றும் கூறினார்.