Published : 04 Sep 2014 12:00 AM
Last Updated : 04 Sep 2014 12:00 AM

மாக்ஸ் லெவ்சின் - இவரைத் தெரியுமா?

$ உக்ரைனில் பிறந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்த யூத குடும்பத்தைச் சேர்ந்தவர். கம்ப்யூட்டர் விஞ்ஞானி. பே பால் நிறுவனர்களில் ஒருவர்.

$ இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர் 1997-ம் ஆண்டு நெட்மெரிடியன் சாஃப்ட்வேர் மற்றும் ஸ்பான்சர்நெட் நியூ மீடியா எனும் நிறுவனங்களை உருவாக்கினார்.

$ 1998-ம் ஆண்டு ஃபீல்ட்லிங்க், பீட்டர் தீயல் என்ற இரு நண்பர்களுடன் இணைந்து கோஃபினிடி எனும் நிறுவனத்தை உருவாக்கினார். எக்ஸ்-காம் நிறுவனத்துடன் இணைந்து இந்நிறுவனம் மிகச் சிறந்த பண பரிவர்த்தனை நிறுவனமாக மாறியது. பின்னாளில் இது பே பால் நிறுவனம் என்றழைக்கப்பட்டது.

$ 2002-ம் ஆண்டு இந்நிறுவனம் பங்கு பத்திரங்களை வெளியிட்டு பொது நிறுவனமாகியது. பின்னர் இந்நிறுவனத்தை இ பே நிறுவனம் கையகப்படுத்தியது.

$ பே பால் நிறுவனத்தில் இவர் உருவாக்கிய, முறைகேடுகளைத் தடுக்கும் சாஃப்ட்வேர் (ஆன்டி ஃபிராடு) மிகவும் பிரபலமானது. உரிய நபரின் உபயோகத்தை உறுதி செய்யும் கேப்ச்சா முறையை உருவாக்கியவரும் இவரே.

$ 2004-ம் ஆண்டு தனிப்பட்ட முறையில் செய்திகளை பகிர்ந்து கொள்ளும் சமூக ஒருங்கிணைப்பு தளத்தை ஸ்லைட் என்ற பெயரில் உருவாக்கினார்.

$ 2011-ம் ஆண்டில் ஹெச்விஎப் எனும் நிறுவனத்தை உருவாக்கினார். 2013-ம் ஆண்டு ஹெச்விஎப் நிறுவனம் குளோ எனும் கருத்தரிப்பு அப்ளிகேஷனை உருவாக்கியது.

$ இப்போது அஃபிர்ம் நிறுவன தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். யாகூ நிறுவன இயக்குநர் குழுவிலும் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x