Published : 26 Sep 2014 10:18 AM
Last Updated : 26 Sep 2014 10:18 AM

100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு

தமிழகம் முழுவதும் 100 அரசு உயர் நிலைப் பள்ளிகள், மேல் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த் தப்பட்டுள்ளன. இதன்மூலம் புதிதாக 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாகும்.

நடப்பு கல்வி ஆண்டில் (2014-2015) 50 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளி களாகவும், 100 அரசு உயர் நிலைப் பள்ளிகள், அரசு மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி, 100 அரசு உயர் நிலைப் பள்ளிகள், நகராட்சி உயர் நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப் பட்டுள்ளன.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியலை பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று முன்தினம் வெளியிட்டார். அதில், அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 8 பள்ளிகளும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா 6 பள்ளிகளும் இடம்பெற்றுள்ளன.

900 காலியிடங்கள் உருவாகும்

100 அரசு உயர்நிலைப் பள்ளி கள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டிருப் பதால் ஒரு பள்ளிகள் 9 காலியிடங்கள் வீதம் புதிதாக 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x