Published : 18 Mar 2018 12:39 PM
Last Updated : 18 Mar 2018 12:39 PM

3 கோடி வங்கிக் கணக்குகளில் கேட்பாரற்றுகிடக்கும் ரூ.11 ஆயிரத்து 300 கோடி பணம்: எஸ்பிஐ-யில் எவ்வளவு தெரியுமா?

நாட்டில் 64 வங்கிகளில் 3 கோடி வங்கிக் கணக்குகளில் ரூ.11 ஆயிரத்து 302 கோடி பணம் கேட்பாரற்று கிடப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதில் அதிகபட்சமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.ஆயிரத்து 262 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.ஆயிரத்து, 250 கோடியும் அனாதையாக இருக்கின்றன. மற்ற வங்கிகளில் ரூ.7 ஆயிரத்து 40 கோடி கேட்பாரற்று இருக்கிறது.

ஒரு நொடிக்கு ஏறக்குறைய ரூ.100 லட்சம் கோடிக்கும் அதிகமான டெபாசிட்களை இந்திய வங்கிகள் கையாள்கின்றன.

தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை, ஆக்சிஸ், டிசிபி, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, இன்டஸ்இன்ட், கோடக்மகிந்திரா, யெஸ் வங்கி ஆகியவற்றில் ரூ.824 கோடி டெபாசிட்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. மேலும் 12 தனியார் வங்கிகளில் மொத்த டெபாசிட் ரூ 592 கோடியும், ஒட்டுமொத்தமாக தனியார் வங்கிகளஇல் ரூ.ஆயிரத்து 416 கோடி பணம் கேட்பாரற்று கிடக்கிறது.

இதில் ஐசிஐசிஐ வங்கியில் ரூ.476கோடி, கோடக்மகிந்திரா வங்கியில் ரூ.151 கோடி அதிகபட்சமாக கேட்பாரற்று இருக்கிறது. 25 அன்னிய வங்கிகளில் ரூ.332 கோடியும், அதிபட்சமாக எச்எஸ்பிசி வங்கியில் ரூ.105 கோடியும் கேட்பாரற்று இருக்கிறது என ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கியின் பேராசாரியர் பி சரண் சிங் கூறுகையில், ‘ வங்களில் கேட்பாரற்று கிடக்கும் இந்த பணத்துக்கு சொந்தக்கார்களுக்கு பல்வேறு கணக்குகள் இருப்பதால், இதை கவனிக்காமல் இருந்திருக்கலாம். அல்லது பினாமி பணமாகக் கூட இருக்கலாம்.

ஆனால், வங்கிஒழுங்குமுறைச்சட்டம் 1949, பிரிவு 26-ன்படி, 10 ஆண்டுகளா செயல்படாத வங்கிக்கணக்குகள் குறித்து ஒவ்வொரு காலண்டர் ஆண்டு முடிந்தபின் அடுத்த 30 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்.

அதேசமயம், பிரிவு26ஏ-வின் படி 10ஆண்டுகள் செயல்படாத கணக்காக இருந்தாலும், கணக்கின் உரிமையாளர்கள் வந்து கேட்கும்போது, அந்த பணத்தை கொடுக்கமுடியாது என்று வங்கி மறுக்க முடியாது. பணத்தை திருப்பி அளிக்க வேண்டியது வங்கியின் பொறுப்பாகும்’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x