2025-26ல் வெளிநாட்டு இருப்பில் இருந்து இந்தியாவுக்கு வந்த 168 டன் தங்கம்

2025-26ல் வெளிநாட்டு இருப்பில் இருந்து இந்தியாவுக்கு வந்த 168 டன் தங்கம்
Updated on
1 min read

மும்பை: இந்​திய ரிசர்வ் வங்கி கடந்த 2025-26 நிதி​யாண்​டில் 168 டன் தங்​கத்தை வெளி​நாட்​டில் இருந்து இந்​தி​யா​வுக்கு கொண்டு வந்​துள்​ளது.

ரஷ்யா - உக்​ரைன் இடையே போர் மூண்ட பிறகு, ரஷ்​யா​வின் டாலர் கையிருப்பை அமெரிக்கா முடக்​கியது. இதையடுத்​து, வெளி​நாடு​களில் டெபாசிட் செய்து வைத்​துள்ள தங்​கத்தை இந்​திய ரிசர்வ் வங்​கி, தாயகம் கொண்டு வரும் நடவடிக்​கை​யில் கடந்த 3 ஆண்​டு​களாக ஈடு​பட்டு வரு​கிறது.

இதன்​படி, கடந்த வியாழக்​கிழமை வெளி​யிடப்​பட்ட தரவு​களின்​படி, 2025-26-ன் 2-ம் பாதி​யில், பேங்க் ஆஃப் இங்​கிலாந்து மற்​றும் பேங்க் ஃபார் இன்​டர்​நேஷனல் செட்​டில்​மென்ட்ஸ் ஆகிய​வற்​றில் வைக்​கப்​பட்​டிருந்த 104.23 டன் தங்​கத்தை ரிசர்வ் வங்கி இந்​தி​யா​வுக்கு கொண்டு வந்​துள்​ளது. முன்​ன​தாக ஆண்​டின் முதல் பாதி​யில் 63.83 டன் தங்​கம் கொண்டு வரப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

ஒட்​டுமொத்​த​மாக, 2025-26 நிதி​யாண்​டில் ரிசர்வ் வங்கி 168.06 டன் தங்​கத்தை இந்​தி​யா​வுக்கு கொண்டு வந்​துள்​ளது. 2023-24-ல் 107.21 டன், 2024-25-ல் 103.68 டன் தங்​கம் இந்​தி​யா​வுக்கு கொண்டு வரப்​பட்​டது.

ரிசர்வ் வங்​கி​யின் மொத்த தங்க கையிருப்பு 880.52 டன். இதன் மதிப்பு ஏப்​ரல் 17 நில​வரப்​படி 122 பில்​லியன் டாலர் ஆகும். இதில் இப்​போதைய நில​வரப்​படி 77 சதவீத தங்​கம் இந்​தி​யா​வில் வைக்​கப்​பட்​டுள்​ளது. மார்ச் 2023-ல் இது வெறும் 38 சதவீத​மாக மட்​டுமே இருந்​தது குறிப்​பிடத்​தக்​கது. மீதம் உள்ள 23 சதவீத தங்​கம் மட்​டுமே வெளி​நாட்​டில் உள்​ளது.

இந்​திய ரிசர்வ் வங்கி தனது தங்​கத்தை உள்​நாட்​டுக்கு கொண்டு வரு​வ​தில் ஆர்​வம் காட்​டி​னாலும், அதன் மொத்த தங்க கையிருப்​பில் பெரிய அளவில் மாற்​றத்தை ஏற்​படுத்​த​வில்​லை. கடந்த 3 ஆண்​டு​களில் அதன் மொத்த தங்க இருப்பு சுமார் 10 சதவீதம் (86 டன்) மட்​டுமே அதி​கரித்​துள்​ளது.

இருப்​பினும், மற்ற சில நாடு​களின் மத்​திய வங்​கி​கள் தங்​களது இருப்பை தீவிர​மாக உயர்த்தி வரு​கின்​றன. போலந்து தேசிய வங்கி 2026-ன் முதல் 3 மாதங்​களில் அதிக தங்​கம் வாங்​கிய நாடாக உள்​ளது. உஸ்​பெகிஸ்​தான் மற்​றும் சீனா ஆகியவை அடுத்​தடுத்த இடங்​களில் அதிக தங்​கம் வாங்​கி​யுள்​ளன.

2025-26-ல் கையிருப்​பில் பெரிய மாற்​றம் இல்லை என்​றாலும், ரிசர்வ் வங்​கி​யின் மொத்த அந்​நியச் செலா​வணி இருப்​பில் தங்​கத்​தின் பங்கு 11.7 சதவீதத்​தில் இருந்து 16.7 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது.

2025-26ல் வெளிநாட்டு இருப்பில் இருந்து இந்தியாவுக்கு வந்த 168 டன் தங்கம்
70 ஆண்டுகளை நிறைவு செய்த அமலாக்கத் துறை: 94% குற்றங்கள் நிரூபணம், ரூ.2.36 லட்சம் கோடி சொத்து முடக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in