Published : 23 Sep 2014 11:40 AM
Last Updated : 23 Sep 2014 11:40 AM

கேரன் மெக்லாக்லின் - இவரைத் தெரியுமா?

$ காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக 2012-ம் ஆண்டு பிப்ரவரி முதல் செயல்பட்டு வருகிறார்.

$ 2003-ம் ஆண்டு நிதிப் பிரிவின் தலைமை துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு டிரான்ஸ்பர்மேஷன் துறையின் தலைமை துணைத் தலைவராக செயல்பட்டார்.

$ 1988-ம் ஆண்டு பிரைஸ் வாட்டர் ஹவுஸ் நிறுவனத்தின் மேலாளராக தன்னுடைய கார்ப்பரேட் வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பிறகு ரைடர் சிஸ்டம்ஸ், ஸ்பெரியோன் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறார்.

$ தொழில்நுட்பத் துறையில் நுழைய விரும்பும் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது குறித்து கேட்டதற்கு, டெக்னாலஜி துறையில் நிறுவனத்தை விட, யாரிடம் நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்பது முக்கியம். காரணம் அவர்தான் உங்களுக்கு அடிப்படைகளை சொல்லித் தரப்போகிறவர் என்று தெரிவித்திருக்கிறார்.

$ வெல்லஸ்லி கல்லூரியில் இளங்கலை பொருளாதாரமும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.வும் படித்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x