Published : 16 Mar 2018 09:02 am

Updated : 16 Mar 2018 09:11 am

 

Published : 16 Mar 2018 09:02 AM
Last Updated : 16 Mar 2018 09:11 AM

கடனை திருப்பி செலுத்தாதவர்கள் வெளிநாடு செல்ல தடை?: மத்திய அரசு பரிசீலனை

வங்கிக் கடனை திருப்பி செலுத்தாத 91 நபர்களின் பட்டியலை மத்திய அரசு தயார் செய்திருக்கிறது. இவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடனை திருப்பி செலுத்தும் வாய்ப்பு இருந்தும் திருப்பி செலுத்தாத 400 நிறுவனங்கள் உள்ளன. இதில் முக்கிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்கள் என 91 நபர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் தொடர்புடைய நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்‌ஸி ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த உடனேயே மத்திய அரசு புதிய மசோதா ஒன்றினை தாக்கல் செய்தது. அதாவது 100 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கியவர்கள், கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு செல்லும் பட்சத்தில் அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு அதிகாரம் அளிக்கும் மசோதா உருவாக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி இருப்பவர்கள் தங்களது பாஸ்போர்ட் குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக கடனை திருப்பி செலுத்தாதவர் கள் வெளிநாடு செல்ல தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல் கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த தகவல் குறித்து நிதித்துறை செய்தி தொடர்பாளர் டிஎஸ் மாலிக் கருத்து கூற மறுத்துவிட்டார். கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் எடுப்பதில் எந்த தவறும் இல்லை. ஒரு வேளை கடனை திருப்பி செலுத்தாதவர் வெளிநாடு சென்றுவிடும் பட்சத்தில் அவரை இந்தியா கொண்டு வரும் பணி மிகவும் சிக்கலானது. அவர் குற்றவாளி என்பது நிரூபணம் ஆகும் வரை அவரை இங்கு கொண்டு வர முடியாது என ஹெச்டிஎப்சி வங்கியின் ஆதித்யா பூரி தெரிவித்தார்.

இவர் கூறியது போல விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் பணி மிகவும் சவாலானதாக இருக்கிறது. இவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்தியாவுக்கு கொண்டு வரும் பணி சிக்கலானது என்பதை தெரிந்து கொண்ட பலர் இந்தியாவில் இருந்து வெளியேறிவிட்டனர். இப்போதாவது இதற் கான வழியை நாம் அடைக்க வேண்டும் என மும்பையை சேர்ந்த வெல்த்மில்ஸ் செக்யுரெட்டீஸ் நிறுவனத்தின் இயக்குநர் கிராந்தி பாதினி கூறினார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author