Last Updated : 30 Mar, 2018 01:24 PM

 

Published : 30 Mar 2018 01:24 PM
Last Updated : 30 Mar 2018 01:24 PM

ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.58 கோடி அபராதம்: ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை

 

முதலீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால், தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.58.9 கோடி அபராதமாக விதித்து ரிசர்வ் வங்கி நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு வங்கியும் தங்களுக்கு முதலீடு திரட்டுவதற்காக வாடிக்கையாளர்களிடம் எச்டிஎம் எனப்படும் முதிர்வு வரை வைத்திருக்கும் முதலீட்டுப் பத்திரங்களை வெளியிடும் அதில் ஐசிஐசிஐ வங்கி ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் ஏதையும் முறையாகப் பின்பற்றவில்லை என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், முதலீட்டுப் பத்திரங்கள் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது, ஒப்பந்தம் செய்யப்பட்ட விவரங்கள், வாடிக்கையாளர்கள் விவரங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறிப்பிடப்படவில்லை. இது முழுமையாக தவறான புரிதலில் ஏற்பட்டதாகும்.

இது ரிசர்வ் வங்கியின் 1949-ம் ஆண்டு சட்டத்தை மீறிய நடைமுறையாகும். ஆதலால், ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.58.9 கோடி அபராதமாக விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

சமீப காலங்களில் தனியார் வங்கிக்கு விதித்த அபராதங்களில் ஐசிஐசிஐ வங்கிக்கு தற்போது விதித்த அபராதமே மிக அதிகபட்சமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x